எவ்ளோ வதந்தி வேண்டுமானாலும் பரப்புங்க, ஒரு செங்கல கூட ஆட்ட முடியாது - மேடையில் தனுஷ் ஆவேச பேச்சு

By subhashini · 2/6/2025

தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

தனுஷ் திரைப்பயணம்:

இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பவிஷுக்கு ஜோடியாக இருந்தது. சுரேந்திரன் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், அருண் விஜய் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள்.

குபேரா படம்:

இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்கள். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுசு உடன் நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, சயாஜி ஷிண்டே உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சோசியல் திரில்லர் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தான் தயாரித்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=1sx0xk0gzVE

படத்தின் இசை வெளியீட்டு விழா:

வருகிற ஜூன் 20ம் தேதி தான் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய தனுஷ், எல்லாருடைய வாழ்க்கையிலும் கஷ்டம் வரும். என்னைப் பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் வதந்திகள், எதிர்மறை கருத்துக்கள் பரப்புகள். ஆனால், இங்கு இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டும் கிடையாது. என்னுடைய தோழர்கள். ஒரு நாலு வதந்தி பரப்பி விட்டு என்னை காலி செய்துவிடலாம் என்று கொஞ்சம் கூட கனவில் நினைக்காதீர்கள். காரணம், அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமே இல்லை.

விழாவில் தனுஷ் சொன்னது:

ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வக்கில்லாமல் நான் இருந்திருக்கிறேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். எந்த நிலையாக இருந்தாலும் சரி சந்தோசமாக நிம்மதியாக இருப்பேன். காரணம், சந்தோஷத்தை வெளியில் தேட முடியாது. வாழ்க்கையில் சந்தோசமும் நிம்மதியும் தான் முக்கியம். யாராக இருந்தாலும் எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும். உங்களிடம் இருப்பதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. சந்தோஷமும் நிம்மதியும் உங்களிடம் தான் இருக்கிறது. அதனை வெளியில் தேடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full