'அசுரன்' படத்துல சொன்னதை தவிர எல்லாத்தையும் கென் பண்ணிருக்கான் - நடிகர் தனுஷ் சொன்னது

By subhashini · 13/3/2026

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள். இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார்.

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் நடித்திருந்தார். பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.
இதற்கிடையில் இவர் தனுஷினுடைய சில படங்களில் உதவி இயக்குனராகம் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் ஈவென்ட் இன்று நடைபெற்றிருக்கிறது. +இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், அசுரன் படத்தில் நம்மகிட்ட காடு இருந்தா புடுங்கிடுவாங்க, காசு இருந்தா புடுங்கிடுவாங்க, படிப்பை மட்டும் எடுத்துக்க முடியாது சிதம்பரம்ன்னு சொன்னேன். ஆனால், நீ அதை தவிர எல்லாமே பண்ணி இருக்க.

பர்ஸ்ட் லுக் போஸ்டரிலே மூணு பொண்ணுங்களோட பைக்கில் உட்கார்ந்து இருக்ககான். திடீர்னு கென், படம் பண்ண போறான்னு எனக்கு ஒரு நாள் வந்து சொன்னான். எதுக்குடா அவசரப்படுற பொறுமையா இன்னும் சில படங்களில் அசிஸ்டென்டா இருந்து கத்துக்கட்டு பண்ணலாமுன்னு சொன்னேன். ஆனால், அதெல்லாம் பண்ணிடுவேன்னு நம்பிக்கையா சொன்னான். அதேபோல இப்ப படத்தை பண்ணி முடிச்சிட்டான். அப்ப எல்லாம் பெரிய நடிகர்களை பார்த்து பணிவை கத்துக்க சொல்லுவாங்க. ஆனா இப்ப இருக்க புது ஜெனரேஷன் கிட்ட வேகத்தை கத்துக்கணும்.

https://www.youtube.com/watch?v=Vw7Shy6RjV0

24 வயசில் தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்லி இத்தனை பேர் டீமையும் புடிச்சு ஒரு படத்தை பண்ணுவது சாதாரண விஷயம் இல்லை. நான் எல்லாம் ரொம்ப யோசித்து யோசித்து நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது. கென் கிட்ட இருந்து நான் அந்த வேகத்தை கற்றுக் கொண்டேன். கென்னோட ஃபிரண்ட்ஸ் நிறைய பேரு திசை மாறி போயிருக்காங்க. ஆனால், அவன் குடும்பத்திற்காக நிக்கிறான். கென் என்னோட பையன் மாதிரி இல்ல பையன் தான். இந்த யூத் படம் மாபெரும் வெற்றி அடைந்து உனக்கும் உன்னை நம்பி வந்த டீமுக்கும் பெற்றோருக்கும் ஆசிர்வாதம் அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full