நடிகராக இல்லை, தனுஷுக்கு இந்த துறைக்கு வரவேண்டும் என்பது தான் ஆசையாம் - தனுஷ் சகோதரி கார்த்திகா சொன்ன சீக்ரெட்.

By Rajkumar · 26/5/2020

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ சினிமா பிரபலங்களில் வாரிசுகள் சினிமாவில் கலக்கி வருகின்றனர். விஜய், ஜெயம் ரவி, ஜீவா, அதர்வா, சூர்யா, கார்த்தி என்று இப்படி எத்தனையோ நடிகர்களை சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் சினிமா குடும்பத்தில் இருந்து வந்து சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”. இந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் வேற லெவல் மாஸ் காட்டி உள்ளார்.

இதையும் பாருங்க : இன்ஸ்டாகிராமில் கிளாமரில் தாராளம் காட்டும் தாளரபிரபு பட நடிகை. கொடுத்துள்ள போஸை பாருங்க.

நடிகர் தனுஷ்க்கு, இயக்குனர் செல்வராகவனை தவிர இரண்டு சகோதரிகள் உள்ளார்கள். அதில் மகப்பேறு மருத்துவராக இருந்து வருபவர் தான் கார்த்திகா. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளும் இறுகின்றனர். ஒரு சில மாதத்திற்கு முன்னர் தனுஷின் சகோதரி தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவை பகிர்ந்திருந்தார். அதே போல சமீபத்தில் தான் தனது பிள்ளைகளுக்கு தாய் மாமன் மடியில் வைத்து மொட்டை அடித்து அழகு பார்த்தார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கார்த்திகா, தனுஷ் பற்றி அறியாத ஒரு சூப்பர் விஷயத்தை கூறியுள்ளார். அதில், அண்ணா, மிகப்பெரிய டிரெண்ட் செட்டர். எங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தது அண்ணாதான். ரொம்பவே வித்தியாசமானவர். தம்பி தனுஷ் செஃப் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப் பட்டார். ஆனால், அவர் பிறவி நடிகர் என்பதை இப்போதுதான் உணர்கிறோம். சிறு வயதிலிருந்தே அவர் ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், முழுமையாகச் செய்வார். அதுதான் அவருடைய வெற்றிக்குக் காரணம். அவர் இன்னும் நிறைய வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full