வைரலாகும் தனுஷின் ஒர்க் அவுட் வீடியோ. ப்ரரூஸ்லியுடன் ஒப்பிடும் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். சினிமா உலகில் இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது.
https://twitter.com/RamLeeofficial/status/1274312914069942272
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த “பட்டாஸ்” படம் வேற லெவல் மாஸ் காட்டியது. இந்நிலையில் தனுஷ் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். அதுவும் தனுஷை தமிழகத்தின் ப்ரூஸ்லீ என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
DhanushWorkOut என்ற ஹேஷ்டேக்கில் இந்த வீடியோ ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் ஆர்யா, சிம்பு என பல நடிகர்களின் ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “ஜகமே தந்திரம்”.
https://twitter.com/abiunique62/status/1274318465046700032
இதனை தொடர்ந்துதனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பிறகு தனுஷ் அவர்கள் இந்தியில் அத்ரங்கி ரே என்ற படமொன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாரும் நடிக்க உள்ளார்.