பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யான். தற்போது இவர் தாராள பிரபு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்து உள்ளார். இந்தியில் ஆயுஷ்மான் குராரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் “தாராள பிரபு”. இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். Sperm donation (விந்தணு தானம்) அடிப்படையாகக் கொண்டு ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி உள்ள படம். இந்த படத்தை ஸ்கிரீன் சைன் மீடியா தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் அனிருத், ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா கபீர் 8 இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து உள்ளனர். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. தாராள பிரபு வசூலில் தாராளத்தை தந்ததா? என்று பார்ப்போம்.

கதைக்களம்:

Advertisement

இந்த படத்தில் பிரபு என்ற கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். இவருக்கு ஃபுட் பால் விளையாட்டில் அதிக ஆர்வம் உடையவர். இவர் வீட்டிற்கு ஒரே ஒரு செல்லப்பிள்ளை. பியூட்டி பார்லர் வைத்து உள்ள அம்மாவும், இயற்கை மருத்துவம் கொண்ட பாட்டி தான் இவருடைய உலகமே. இவர் வேலை இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞராக உள்ளார். இந்த படத்தில் செக்ஸாலஜி டாக்டராக காமெடி நடிகர் விவேக் நடித்திருக்கிறார். குழந்தை செல்வம் வேண்டும் என்று வரும் தம்பதியருக்கு குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணு உள்ள டோனரை தேடி அலைகிறார். அப்போது தான் ஹீரோவை சந்திக்கிறார். பின் எப்படியோ ஹரிஷ் கல்யாண் பின்னாடி அலைந்து திரிந்து அவரை சம்மதிக்க வைக்கிறார்.

Advertisement

ஹீரோ மருத்துவரின் ஐடியா பேரில் விந்தணுவை விற்று நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் தான் ஹீரோ தன்னுடைய காதலியை சந்தித்து காதலிக்க தொடங்குகிறார். பின் இவர்களுடைய திருமணம் நடக்கிறது. ஆனால், கணவன்– மனைவி இருவருக்கும் மனக்கசப்பு, பிரச்சனை என்று பல ரூபங்கள் வருகிறது. தன் நண்பர்கள், அம்மா, மனைவி என யாரிடமும் இந்த விந்தணு தானம் பற்றி சொல்லாமல் மறைத்து விடுகிறார். விந்தணு டோனர் மூலமாக ஹரிஷ் கல்யாண் இல்லற வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வருகிறது.

Advertisement

ஹரிஷ் கல்யாண் வாழ்க்கையில் குழந்தை பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இவர்கள் குழந்தை தத்து எடுக்கலாம் என்று செல்கிறார்கள். பின் இவர்கள் தன்னுடைய மருத்துவர் விவேக்கின் மூலம் இந்த பிரச்சனையை எப்படி சரி செய்கிறார்கள்? ஹீரோ ஹரிஸ் தன் மனைவியுடன் சேர்ந்தாரா? இதனால் ஹரிஷுக்கு உடலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா? என்பது தான் இந்த படத்தின் கதை. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள அனைத்து படங்களும காதல், பிரிவு என்ற பாணியில் இருந்தது. தற்போது இந்த படத்தில் மாறுபட்ட விந்தணு தானம் செய்பவர் ஆக நடித்திருக்கிறார்.

இவருடைய நடிப்பும் ஸ்டைலும் வழக்கம்போல் பட்டைய கிளப்பியுள்ளது. கதாநாயகி தன்யா ஹோப் தன்னுடைய கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். இந்த படத்தில் டாக்டர் கண்ணதாசன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் விவேக். இவருடைய காமெடியும், பஞ்ச் டயலாக் வேற லெவல் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. படத்தில் டீசன்டாக அடல்ட் காமெடி சொல்லி உள்ளார்.

இந்த படத்தின் மூலம் கிருஷ்ணா மாரிமுத்து சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது வளர்ந்து வரும் காலத்தில் வீதிக்கு வீதி குழந்தையின்மைப் பிரச்சனை உருவெடுத்து கொண்டுவருகின்றது. அதற்கேற்றவாறு காலத்தின் விந்தணு முக்கியத்துவத்தையும், தாம்பத்திய வாழ்க்கையின் ஆரோக்கியத்தையும் அழகாய் எடுத்துக் கொள்கிறார் இயக்குனர். படத்தில் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் வேலை எல்லாம் மிரட்டலாக உள்ளது.

பிளஸ்:

தாம்பத்தியத்தின் முக்கியத்துவத்தையும், குழந்தையையும், ஆண் ஒழுக்கத்தையும் அழகாக எடுத்துக் காட்டி உள்ளார்கள்.

படத்திற்கு பக்க பலமாக விவேக்கின் கதாபாத்திரம் அமைந்துள்ளது.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் கன கச்சிதமாக பொருந்தி உள்ளது.

மைனஸ்:

படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பல்பும் இல்லை.

இந்த படம் அடல்ட் படமாக உள்ளது.

இறுதி அலசல்:

தற்போதிருக்கும் சமுதாயத்திற்கு இந்த படம் ஒரு நல்ல மெசேஜ். திருமணமாகாத இளைஞர்கள் மட்டும் இல்லாமல் திருமணமான தம்பதிகளும் பார்க்க வேண்டிய படம். மொத்தத்தில் தாராளப் பிரபு– ஜாலியான பிரபு.

Advertisement