இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நினைவை போற்றி நடிகர் திலீபன் குமார் போட்ட பதிவு

By subhashini · 23/12/2025

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பாலச்சந்தர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் நாடக ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக நூறு படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போன்ற பிறமொழி படங்களிலும் பணியாற்று இருக்கிறார்.

அதோடு இவர் தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி வைத்து பெரிதாக படம் கொடுக்கவில்லை. சிவாஜியை வைத்து ஒரே ஒரு படத்தை மட்டும் தான் இயக்கியிருந்தார். சிவாஜி நடிப்பில் வெளியான ‘எதிரொலி’ படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை, நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்று இருந்தது. அதற்குப் பிறகு இவர் பல நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு உருவாக்கி கொடுத்தார்.

கே.பாலச்சந்தர் குறித்த தகவல்:

குறிப்பாக ரஜினி, கமல் விவேக், நாகேஷ் போன்ற பல நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் படுத்தி வைத்தது கே.பாலச்சந்தர் தான். அதன் பின் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இயற்கை எய்தினார். இவருடைய மறைவு தமிழ் சினிமா உலகில் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று மறைந்த இயக்குனர் கே பாலச்சந்திரன் நினைவு நாள்.

கே.பாலச்சந்தர் நினைவு நாள்:

இதை ஒட்டி பலருமே தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர்
திலீபன் குமார், பாலச்சந்திரன் நினைவு நாளை ஓட்டி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர்,
நெறஞ்ச மனசு ..படம் வொர்க் பண்ணி முடித்து சில மாதங்களுக்குப் பிறகு எந்த வேலையும் இல்லாமல் வறுமை விரட்டவே ஊரில் சென்று உட்கார்ந்து கொண்டேன். சமுத்திரகனி அவர்கள் எனக்கு போன் பண்ணி
எங்கடா இருக்க, என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டார்.

திலீபன் குமார் பதிவு

நான் "சார் பொருளாதாரம் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் சொந்த ஊரில் வந்து பதுங்கி விட்டேன்.
மீண்டும் சென்னை வருவதாக இருந்தால் ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் தான் வர முடியும். என் நிலைமை அப்படி என்றதும் அவர் "நான் இப்ப கே பாலச்சந்தர் சாரோட "பொய் "படம் கோ டைரக்டர் ஆ ஒர்க் பண்ண போறேன். ஆபீஸ்ல ரைட்டிங் வேலைகள் போயிட்டு இருக்கு என்று சொல்லி முடிக்கும் முன்பு நான் "சார் எனக்கும் அங்கே உதவி இயக்குனர் வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியுமா என்று கேட்க, அவரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் "நீ கிளம்பி சென்னைக்கு வா… பாத்துக்கலாம் என்றார். அடுத்த இரண்டு தினங்களில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

சமுத்திரகனி சார் ஏற்கனவே என்னை பற்றி நல்லவிதமாக சொல்லி இருந்ததால் எந்த கேள்வியும் கேட்காமல் என்னை உதவி இயக்குனராக ஏற்றுக் கொண்டார். அது என் வாழ்வின் அதிசயங்களில் ஒன்று இலங்கையில் 50 நாட்கள், சென்னையில் 20 நாட்கள், ஷூட்டிங் முழுக்க கேபி சார் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லித் தரும் நுட்பத்தை ரசித்தபடியே வேலை பார்த்தேன். இயக்குனர் சிகரத்தின் மேதமையை அவர் நடிகர்களையும் டெக்னீசியன்களையும் வேலை வாங்கும் பாங்கினை அருகிலேயே இருந்து கவனித்த அந்த நாட்கள் என் வாழ்வில் இனிமையானவை. அதற்கு காரணமான சமுத்திரக்கனி அவர்களுக்கு எப்போதும் போல நன்றி சொல்லிக் கொள்கிறேன். இன்று இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவ தினம் நினைவுகளை போற்றுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full