உனக்கு எதுக்கு இந்த மாதிரி ட்ரஸ், ஆடையை மாற்ற சொன்னதா நடிகை குறித்து டிடி அளித்த பேட்டி

By subhashini · 26/8/2023

ஒரே மாதிரி உடை அணிந்து இருந்ததால் அந்த நடிகை என்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று டிடி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு இவர் உடைய பேச்சாலும், திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

மேலும், டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். அதிலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

டிடி திரைப்பயணம்:

அதோடு இவர் 21 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

டிடி குறித்த தகவல்:

பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காபி வித் காதல். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் நிகழ்ச்சி,சினிமா என பிசியாக இருக்கிறார்.

டிடி அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் டிடி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தொகுப்பாளினியாக இருக்கும் போது நடந்த கசப்பான நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், எந்த கெஸ்டும் என்னை கோபப்படுத்தியதே கிடையாது. ஒருமுறை என்னுடைய நிகழ்ச்சிக்கு ஒரு ஹீரோயின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு தாமதமாக தான் வந்தார். அந்த நடிகை அணிந்திருந்த உடையும் என்னுடைய உடையும் ஒரே மாதிரியாக இருந்தது.

ஹீரோயின் செய்த செயல்:

அப்போது அந்த நடிகை என்னிடம் வந்து, டிடி நீங்க வேறு ஏதாவது டிரஸ் எடுத்து வந்து இருக்கீங்களா? என்று கேட்டார். அவர் எனக்கு கேட்டது கஷ்டமாகிவிட்டது. தொகுப்பாளராக இருந்து கொண்டு உனக்கு எதுக்கு இந்த ட்ரஸ் என்ற எண்ணத்தில் தான் அவர் என்னிடம் பேசினார். இருந்தாலும் நான் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் மரியாதையாக தான் நடந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், டிடி சொன்ன அந்த நடிகை யார் என்று தெரியவில்லை.

behindtalkies AMP · Quick view
View full