மனைவி சாக்‌ஷி எழுதிய கதை,தமிழில் படமாக தயாரிக்கும் தோனி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

By Rajkumar · 25/10/2022

தன்னுடைய மனைவி சாக்ஷி எழுதிய கதையை தமிழில் படமாக தோனி தயாரிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி. பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு எண்ணி சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தோனி .

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து இருக்கிறார். மேலும், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதோடு சில ஆண்டுக்கு முன் இவரின் வாழ்கை திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

தோனி குறித்த தகவல்:

இதனை தொடர்ந்து தோனி சினிமாவிற்கு எப்போ வருவார்? என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தான் தோனி அவர்கள் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் இவர் ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். இந்த நிலையில் டோனி அவர்கள் முதல் திரைப்படத்தை தயாரிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்:

தற்போது தோனி அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். அந்த படத்தை பல மொழிகளில் அவர் வெளியிட இருக்கிறாராம். அந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷியே எழுதி இருக்கிறார். அந்த கதையை தோனி 3d வடிவில் எடுக்க இருக்கிறாராம். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி தான் இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தோனி தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு இருக்கிறார்.

தோனி

அது மட்டும் இல்லாமல் இது குறித்து தோனியின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக பதிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் அவர்கள், எங்களை மொழி சார்ந்த நிறுவனம் என அடையாளப்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. நம்முடைய நாட்டின் மூளை முடுக்கெல்லாம் உள்ள இந்திய பார்வையாளர்களுக்கு அர்த்தம் உள்ள கதைகளை கொடுக்கும் நோக்கில் உள்ளது. இந்த நிறுவனம் அறிவியல் புனைவு, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் வகையான திரைப்படங்களில் உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம்:

அதற்காக பல தயாரிப்புகளிடம், திரைக்கதை ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் சில டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க தோனி திட்டமிட்டு இருக்கிறார். இது தொடர்பாக விஜய்யுடன் கூட பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full