தோனி முதல் தனுஷ் வரை, பிரபலங்கள் விரும்பி அணியும் இந்த ஒத்த டீ-ஷர்ட் விலை எவ்ளோ தெரியுமா (இதுல Tax வேறயாம்)

By subhashini · 15/3/2022

பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி கோலிவுட் நட்சத்திரங்கள் வரை என ஏராளமானோருக்கு பிடித்த பேவரட் டி-ஷர்ட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. பொதுவாகவே சினிமா பிரபலங்கள் அணியும் ஆடைகள் ரசிகர்கள் மத்தியில் அதிக மோகத்தை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் அணியும் டீசர்ட் முதல் ஹேர் ஸ்டைல் வரை என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனால் நடிகர், நடிகைகள் அணியும் ஆடைகள், பொருட்கள் எல்லாம் சில சமயங்களில் மார்க்கெட்டிங் டிமான்டும், ட்ரெண்டிங்கும் ஆகிறது.

அதனாலேயே பல பொருள்களின் உரிமையாளர்கள் நடிகர் நடிகைகளை வைத்து தங்களின் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் ஆடை முதல் உபயோக பொருட்கள் வரை என அனைத்தும் எளிதாக ரீச் அடைகிறது. அதுமட்டும் இல்லாமல் சமீப காலமாக பல பிரபலங்கள் விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை என பல பிரபலங்களின் டீ சர்ட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Balmain டீ-சர்ட் பற்றிய தகவல்:

அது என்னவென்றால், தற்போது திரைப்பிரபலங்கள் விரும்பி அணியும் ஆடையாக Balmain என்ற டீ-சர்ட் உள்ளது. தற்போது இது தான் பயங்கர டிரெண்டிங்கில் உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

சிவகார்த்திகேயன் அணிந்த Balmain டீ சர்ட்:

இதனை தொடர்ந்து கமல் தயாரிப்பில் உருவாகும் படம், தெலுங்கு மொழியில் உருவாகும் படம் என பல மொழி படங்களில் சிவகார்த்திகேயன் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க, கடந்த வாரம் சிவகார்த்திகேயன் அவர்கள் டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும், அதே நிறத்தில் Balmain டீ சர்ட்டும் அணிந்து வந்திருந்தார். பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் செம ஸ்டைலிஷாக சிவகார்த்திகேயன் இருந்தார்.

Balmain டீ சர்ட் அணியும் பிரபலங்கள்:

இந்நிலையில் இவர் அணிந்திருக்கும் டீஷர்டின் விலையை ரசிகர்கள் இணையத்தில் தேடி அதிர்ச்சி அடைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த Balmain டீ சர்டின் விலை 557 டாலர். அதாவது இந்திய மதிப்பில் 45000 ரூபாய். மேலும், இந்த டீ-சர்ட்டை சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் இந்திய சினிமா உலகில் பல பிரபலங்களின் பிராண்ட் ஆகவும் இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், சல்மான் கான், கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜுன், கோலிவுட்டில் சிம்பு, விக்னேஷ் சிவன், தனுஷ் என ஏராளமான நடிகர்களின் பேவரட்டாக உள்ளது. அப்படி என்ன இந்த டீசரில் ஸ்பெஷல் என்றால், அதனை தயாரிக்கும் Balmain என்கிற நிறுவனம் தான்.

Balmain நிறுவனம் பற்றிய தகவல்:

இந்த நிறுவனம் பாரிசை மையமாகக் கொண்டது. இந்த நிறுவனம் தயாரிக்கும் ஆடைகள், ஜாக்கெட்டுகள், அணிகலன்கள் எல்லாமே தரமானதாக முன்னிலை வகிக்கிறது. மேலும், Balmain ஆடைகள் இத்தாலி, சீனா, ஜப்பான், பல்கேரியா, போர்ச்சுகல், போலந்து ஆகிய நாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன. இதை பிற நாடுகளில் இறக்குமதி செய்கின்றனர். நல்ல தரமான ஸ்டைலிஷான ஆடையாக இருப்பதால் இதை இந்திய சினிமா உலக பிரபலங்கள் விரும்பி அணிந்து வருகிறார்கள். இப்படி இந்த டீ சர்ட்டை அணிந்திருக்கும் நடிகர்களின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full