தென்தமிழகத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிறைய நடக்கிறது - துருவ் விக்ரம் ஓபன் டாக்

By subhashini · 22/10/2025

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விக்ரமின் மகன் ஆவார். துருவ் அவர்கள் ஆதித்ய வர்மா என்ற படத்தில் தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக். இந்த படத்தில் பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமில்லாமல் துருவ் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் தனது தந்தை விக்ரமுடன் சேர்ந்து துருவ் நடித்து இருந்தார். தற்போது துருவ் அவர்கள் பைசன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார்.

பைசன் படம்:

ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. இதை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பைசன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் அனுபமா, ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

துருவ் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் துருவ் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ஏன் தமிழ் சினிமாவில் மட்டும் ஜாதி சம்பந்தப்பட்ட படங்கள் நிறைய வருகிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு துருவ், ஒவ்வொரு படைப்பாளர்களுக்கும் தங்களுடைய சுய சிந்தனைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=DLd1cbBAOts

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

மாரி செல்வராஜ் தென் தமிழகத்தை சேர்ந்தவர். அவர் தன்னுடைய வாழ்க்கை போராட்டங்களின் வழியே தான் படங்களை உருவாக்கினார். இன்னும் இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படிப்பட்ட கதைகளும் சொல்லப்பட வேண்டும். சினிமா என்பது மக்களை விழிப்புணர்வு அடைய செய்ய ஒரு சரியான கருவி. இந்த மாதிரி கருவிகள் தமிழ் சினிமாவில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full