தமிழ் சினிமாவில் எத்தனவோ சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிகர்களாக ஜொலித்து வருகின்றனர், விஜய் துவங்கி சாந்தனு, அதர்வா வரை எத்தனையோ நடிகர்களின் மகன்களும் அடக்கம். அந்த வகையில் தற்போது இளைய தலைமுறையில் வாரிசு நடிகராக சமீபத்தில் அறிமுகமானவர் விக்ரம் மகனான துருவ் விக்ரம். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீ-மேக்கான ‘ஆதித்ய வர்மா ‘ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் துருவ்.

அதுமட்டுமில்லாமல் துருவ் இந்த படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் துருவ் நடிப்பு முதல் படம் மாதிரியே இருக்காது. அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்திருந்தார். அனுபவமிக்க நடிகரைப் போல நடித்திருந்தார் என்று ரசிகர்களும், பிரபலங்களும் துருவ்வை பாராட்டினார்கள். சமீபத்தில் கூட ஆதித்ய வர்மா படத்திற்காக துருவ்க்கு விருது கிடைத்தது.

Advertisement

ஆனால், இந்த படத்திற்கு முன்பாவே துருவ், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக வேண்டியது. ஆனால், அது விக்ரமால் தடைபட்ட போய்யுள்ளது. அது வேறு எந்த படமும் இல்லை பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படம் தான். 2009-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி வெளி வந்த திரைப்படம் ‘பசங்க’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இது தான் இயக்குநராக பாண்டிராஜிற்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. கடந்த மே 1-ஆம் தேதியோடு இப்படம் வெளி வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டது குறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#11YearsOfPasanga’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாண்டிராஜ் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்தார்.

Advertisement

அதில், பசங்க படத்தில் விக்ரம் சாருடைய மகன் துருவ்வை அன்புக்கரசு கதாபாத்திரத்திலும் நாசர் சாருடைய மகன் அபிஹசனை ஜீவானந்தம் கதாபாத்திரத்திலும் நடிக்க வைக்க பிளான் செய்து அவங்கக்கிட்டபோய் கதை சொன்னேன். அப்போ ரெண்டு பேரும் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தாங்க. ‘படிச்சிட்டு இருக்கான். இப்போ அவனைத் தொந்தரவு பண்ண வேண்டாமே’னு விக்ரம் சார் சொன்னார். 

Advertisement

அதன் பின்னர்  ‘மெரினா’ படம் முடிந்த பின்னர், விக்ரம் சாருக்கு ஒரு கதை சொவதற்காக அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவர் மனைவிகிட்ட, ‘இவர்தான் ‘பசங்க’ டைரக்டர். துருவ்வை நடிக்க வைக்க கேட்டவர்’னு அறிமுகப்படுத்தி வெச்சார். அப்போ அவங்க மனைவி, ‘என் பையனுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கும். நீ கெடுத்துட்டியே கென்னி’னு ஜாலியா பேசிட்டிருந்தாங்க என்று கூறியுள்ளார் பாண்டிராஜ்.

Advertisement