ஐயப்பனும் கோசியும் இயக்குனருடன் பணிபுரிய நினைத்தாரா அஜித் ? ஐயோ இது மட்டும் நடந்திருந்தால்.

By Rajkumar · 30/6/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து உள்ளது. கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் தல அஜித் அவர்கள் மறைந்த மலையாள இயக்குனர் படத்தில் நடிக்க இருந்ததாக
தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் ப்ரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இத்திரைப்படத்தை இயக்குனர் சச்சி இயக்கி இருந்தார்.

சமீபத்தில் இயக்குனர் சச்சி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது இறப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை பார்த்த நடிகர் அஜித் அவர்கள் மறைந்த இயக்குநர் சச்சிக்கு ஃபோன் செய்து பாராட்டி இருந்தார். மேலும், அவரின் இயக்கத்தில் நடிக்க விரும்பியதாகவும் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன் இயக்குனர் சச்சி காலமாகிவிட்டார். இதை தொடர்ந்து இதுகுறித்து கோலிவுட் வட்டாரங்களிடம் விசாரித்த போது, அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் உடன் பணிபுரிய தல அஜித் விரும்பியதாக வரும் செய்திகள் யாவும் முற்றிலும் தவறானவை என மறுத்து உள்ளனர். மேலும், இதுபோன்ற எந்த விஷயமும் நடக்கவில்லை என்று ஆணித்தரமாக கூறுகின்றனர்.

தற்போது சோசியல் மீடியாவில் அஜித் மற்றும் மறைந்த இயக்குநர் சச்சி குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது தல அஜித் அவர்கள் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full