சீரழித்த அரசியில் நடிகர். புத்தம் வெளியிட மறுத்த ஆண்ட்ரியா. கொலை மிரட்டல்.

By Rajkumar · 1/11/2019

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார் சினிமாவில் ஆரம்பத்தில் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக இருந்து வந்த ஆண்ட்ரியா அதன்பின்னர் பாடகியாக அவதாரம் எடுத்தார் பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடங்கி சமீபத்தில் வெளியான வடசென்னை படம் வேறு நடிகை ஆண்ட்ரியா பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி இருந்த தரமணி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த வடசென்னை படத்தில் மேலாடை இன்றி நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் ஆண்ட்ரியா. ஆனால், சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா தன்னை அரசியல் வாரிசு நடிகர் ஒருவர் சீரழித்து விட்டதாக பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது அந்த பேட்டியில் பேசிய ஆண்ட்ரியா, திருமணமான சமயத்திலேயே நான் அரசியல்வாதி நபருடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்திருந்தேன். அவரால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இதையும் பாருங்க : ஏன் இன்னும் இலங்கைக்கு செல்லவில்லை. முதன் முறையாக வீடியோ வெளியிட்ட தர்ஷன்.

அதனால் சிறிது காலம் நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தேன் என பகிரங்கமான பேட்டியில் கூறியிருந்தார். எந்த நடிகையும் இப்படி ஒரு விஷயங்களை பகிரங்கமாக மேடையிலோ அல்லது ஊடகங்களிலும் கூட கூற மாட்டார்கள். ஆனால், ஆண்ட்ரியா எந்த துணிச்சலுடன் கூறினார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர் யார்? யார்? என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை நான் எழுதிய "ப்ரோக்கன் விங்ஸ்" புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு உள்ளேன் என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தார்.

ஆண்ட்ரியா எப்படி சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது அதேபோல ஆண்ட்ரியா தன்னை சீரழித்த நபர் யார் என்று குறிப்பிட்ட அந்த புத்தகத்தை கடந்த மாதம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியிடப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால், அவர் சொன்னது போல அந்த குறிப்பிட்ட புத்தகம் ஆண்ட்ரியா சொன்ன தேதியில் வெளியாகவும் இல்லை. இதற்கு முக்கிய காரணம்,ஆண்ட்ரியா குறிப்பிட்ட அந்த அரசியல் வாரிசு நடிகர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் அவருக்கு பயந்து ஆண்ட்ரியா அந்த புத்தகத்தை வெளியிடவில்லை என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆண்ட்ரியா சொன்ன விளக்கத்தை வைத்து ரசிகர்கள் அந்த நபர் யார் என்பதை ஓரளவிற்கு யூகித்து விட்டனர். அதேபோல ஆண்ட்ரியா இவ்வாறு பேட்டி அளித்த சில நாட்களிலேயே பிரபல ஊடகம் ஒன்று ஆண்ட்ரியா சொன்ன அந்த குறிப்பிட்ட அரசியல் நடிகரின் பெயரை தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், அந்த செய்திகள் வெளியான சில மணி நேரத்திலேயே நீக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்ட்ரியா விஷயம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆண்ட்ரியா வாழ்க்கையை சீரழித்த அந்த குறிப்பிட்ட அரசியல் வாரிசு நடிகர் யார் என்று நீங்கள் வைத்திருந்தால் அதனை கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full