தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் தான் தலைவிரித்து ஆடுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பின்பற்றபட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்களை போல சினிமா தொழிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி பொழுதை கழித்து வருகின்றனர்.இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50000-த்தை நெருங்க உள்ளது. இதுவரை இந்த நோயினால் 1,694 பேர் பலியாகியும் உள்ளார்கள்.

இந்த நிலையில் பாரதி ராஜா தேனியில் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவேனில் என் சகோதரி தேனியில் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முறையாக அதற்கான அனுமதியுடன் சீட்டு ஒன்று வாங்கி நான் பல மாவட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன். இங்கு வந்து சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார்.

Advertisement

நான் நேர்மையாக பல மாவட்டங்களைக் கடந்து வந்த காரணத்தால், தேனி நகராட்சி சுகாதாரத்துறை அமைப்பிடம் தொலைபேசியில் பேசி “நான் பல மாவட்டங்களக் கடந்து வந்துள்ளேன். தயவு செய்து என்னைச் சோதித்துக் கொள்ளுங்கள்” என்றேன். அவர்களும் வந்து முறையான சோதனைகள் எல்லாம் எடுத்தார்கள். இதுவரை மூன்று முறை சோதனை எடுத்துள்ளேன்.

சென்னையில் ஒருமுறை, ஆண்டிபட்டியில் ஒரு முறை தேனியில் ஒரு முறை என்று மூன்று முறை பரிசோதனை எடுத்துள்ளேன். என்னோடு உடன் இருந்த உதவியாளர் இரண்டு பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கும் எந்த தொற்றும் இல்லை. இருந்தாலும் மக்களின் நலனுக்காகநான் என்னுடைய உதவியாளருடன் எங்களை நாங்களே தனிமைப்படுத்தி கொண்டோம். நாங்கள் மகிழ்ச்சியாக தேனியில் இருக்கிறோம். இதான் நடந்த உண்மை என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement