என்னது, பிக் பாஸ் போட்டியாளர் இறந்துட்டாரா ? சர்ச்சையை கிளப்பிய ஜேம்ஸ் வசந்தன் பதிவு. ரசிகர்களின் கமென்ட்ஸ்.
90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.
90ஸ்சின் பேவரைட் தொகுப்பாளர் :
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சுகந்தி என்ற பெண்ணை 1991 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும், இவர்களுக்கு ஷில்பா என்ற ஒரு மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளார்கள். இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.
ஜேம்ஸ் வசந்தனின் பிக் பாஸ் விமர்சனங்கள் :
மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். ஜேம்ஸ் வசந்தன் விஜய் டிவியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானதை விட முகநூல் பக்க பதிவுகள் மூலம் தான் அதிக பிரபலமானார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அனைவர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார்.
கடந்த சீசனை போல இந்த சீசனிலும் பிக் பாஸ் பற்றி பல பதிவுகளை போட்டு வருகிறார். அதிலும், பாவனி - அபிநய் விவகாரத்தில் ராஜு 'பாவனிய நீங்க லவ் பண்றீங்களா' என்று கேட்டதை கடுமையாக விமரித்து ராஜுவை கேள்வி கேட்டு இருந்தார். இவரது பிக் பாஸ் கணிப்புக்கு என்று பல ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒருஇவரின் சமீபத்திய பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு :
சமீபத்தில் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் 'நேற்று இரவு ஒரு முன்னாள் Bigg Boss நிகழ்ச்சி பங்கேற்பாளர் ஒரு விபத்தில் இறந்து போவதாக கனவு கண்டேன். T. Nagar-ல் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் 5-வது மாடியில் இறுதிச் சடங்கு நடக்கிறது. நான் அவரைக் குறித்து எதுவுமே சிந்தித்தது கூட கிடையாது. எனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை. நேரில் சந்தித்திருக்கிறேனா என்பது கூட நினைவில்லை.இது எப்படி நிகழ்ந்தது?' என்று பதிவிட்டு இருந்தார்.
ரசிகர்களின் கமெண்ட்ஸ் :
ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவை பார்த்த பலரும் பல விதமான கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதிலும் பெரும்பாலோனார் நீங்கள் பிக் பாஸ் குறித்து நினைத்துக்கொண்டே தூங்கி இருப்பீர்கள். அதனால் தான் இப்படி எல்லாம் கனவு வருகிறது என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலரோ யாருக்கும் ஒன்றும் ஆகக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.