தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர் என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் பீஸ்ட் படத்துக்கு பின்னர் சமூக வலைத்தளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தார். அதிலும் விக்ரம் படம் வெளியான போது லோகேஷை பாராட்டியவர்களை விட நெல்சனை கேலி செய்தவர்களே அதிகம். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய அணைத்து படங்களும் வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்துவந்தது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருந்தது. விக்ரம் படம் ஓடியதற்கு நெல்சனை கலாய்க்க முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் விஜய்யின் தீவிர ரசிகர். பீஸ்ட் படம் எடுப்பதற்கு முன்னாள் அவர் கண்டிப்பா ஒரு Fan Boy சம்பவத்தை செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

Advertisement

ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் தான். எனவே, அவரும் கமலை வைத்து ஒரு தரமான Fan boy சம்பவத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை நிறைவேற்றி இருந்தார் லோகேஷ். இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் நெல்சனை திட்டி தீர்த்து

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் நெல்சன் மற்றும் லோகேஷ் இருவரும் வரவேற்கப்பட்டு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விழாவில் லோகேஷை மட்டும் பாடி கார்ட்ஸ் அழைத்து சென்றனர். ஆனால், நெல்சன் மட்டும் யாரும் இல்லாமல் தனியாக சென்றார். இதனை குறிப்பிட்ட நெட்டிசன்கள் பலர் இது மிகவும் தவறான ஒன்று, ஒரு படம் Flop கொடுத்தால் இப்படி தான் நடத்துவீங்களா ? என்று கூறி வருகின்றனர்.

Advertisement

கண்டிப்பாக ஜெய்லர் படத்தின் மூலம் நெல்சன் நிச்சயம் ஒரு கம் பேக் கொடுப்பார் என்று நெளசனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இதே போல கடைசியாக நடைபெற்ற விகடன் விருது விழாவில் பார்த்திபனால் ஒரு சர்ச்சை எழுந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற விகடன் விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படம் வெளியான போது பார்த்திபனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு இருந்தது.

Advertisement

ஆனால், ஒத்த செருப்பு படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்று பார்த்திபன் அந்த விருதை திருப்பி கொடுப்பதாக அறிவித்து இருந்தார். மேலும் தனது மன வருத்தத்தை ட்விட்டரில் தெரிவிதித்திருந்த பார்த்திபன் ‘2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை.

வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்!அமைதியாக திரும்பி விட்டேன். ரசிகர்களின் கைத்தட்டலை மீறிய விருதில்லை காசை குடுத்து படத்தை பாராட்டும் ரசிகர்களே கொண்டாடிய பிறகு, விகடன் Special mention என்ற விருதாய் இல்லாமல் Insult செய்வதாய் இருந்தது.இனி வாழ்நாளில் உங்கள் விருதே வேண்டாம் ஒரு கலைஞனின்ஆதங்கம்,விருதின் மீது அவனின் மரியாதை’ என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டும் விகடன் விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் கடந்த ஆண்டு வெளியான சில படம், நடிகர், இயக்குனர் என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்து இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘And the winner is…..Vikadan, விருது பெற்ற சாதனையாளர்களுக்கு Salute!!!’ என்று பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement