திருமணத்தை நேரில் ஒளிபரப்ப 100 கோடி, அறைகள், மருதாணிக்கு மட்டும் பல லட்சம் - வாயை பிளக்கும்படி நடக்க இருக்கும் திருமணம்.

By Rajkumar · 7/12/2021

பிரம்மாண்டமாக கத்ரினா கைப் திருமணம் தயாராகி வருகிறது. திருமணத்தில் போட்டோவுக்கு தடை, உச்ச நடிகருக்கு அழைப்பதழ் இல்லை, ஒரு இரவு தங்கும் அறையின் விலை என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கத்ரீனா கைஃப். இவர் ஹிந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், 38 வயதான கத்ரீனா கைப்பும், 33 வயதான நடிகர் விக்கி கவுசாலும் நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இவர்களுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்கள் திருமணம் வரும் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக ராஜஸ்தானில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.திருமணத்தில் கலந்துகொள்ள பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் திருமணத்திற்கு முன்பு மும்பை கோர்ட்டில் சம்பிரதாயத்திற்கு திருமணம் செய்ய கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட ரிசார்ட்டில் திருமணம் நடைபெற உள்ளதால் இந்த ரிசார்ட்டில் உள்ள ராஜா மன்சிங் அறையில் நடிகர் விக்கி கவுசிலும், ராணி பத்மாவதி அறையில் நடிகை கத்ரினாவும் தங்க இருக்கிறார்கள்.அந்த அறைக்கு ஒரு இரவுக்கு மட்டும் வாடகை தலா 75 லட்சம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கத்ரீனாவுக்காக ஸ்பெஷலாக Sojat மெஹந்தி போட்டார்கள். இது ஜோத்பூரில் உள்ள பாலி எனும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த மெகந்தி இயற்கையான முறையில் உருவாக்கபடுவதாகவும், அதில் எந்த கெமிக்கல் கலக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மெஹந்தியின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இவர்கள் திருமணத்தில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் நடிகர் சல்மானுக்கு திருமண அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சல்மான்கானுடன் படங்களில் கத்ரினா கைப் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்து சல்மான்கான் சகோதரி பேட்டி அளித்து இருக்கிறது. அதில் அவர், எங்களுடைய குடும்பத்திற்கும், என்னுடைய சகோதரர் சல்மான்கானுக்கும் எந்த ஒரு அழைப்பு அனுப்பப்படவில்லை.

அதனால் நாங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார். அதே போல இவர்கள் திருமணத்தை நேரலையில் ஒளிபரப்ப பிரபல Ott தளம் ஒன்று 100 கோடி வரை கொடுப்பதாக கூறியதாகவும் ஆனால் , அதையும் கத்ரீனா - விக்கி ஜோடி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full