காலியான விஜய் இடத்தை பிடிக்கப் போகிறாரா சிவகார்த்திகேயன்? சமீப கால நடவடிக்கைகளால் கிளப்பிய புகை.

By subhashini · 13/3/2024

அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என்ற கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே கோலிவுட்டில் அடுத்த தளபதி யார்? என்ற கேள்வி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல விவாதங்கள் தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் தளபதி விஜய் அவர்கள் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி தன்னுடைய அரசியல் பணியை மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிவித்திருந்தார்.

https://twitter.com/SKFC_Videos/status/1767558471250223134

அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருவதால் இனி விஜய் அவர்கள் சினிமாவில் நீடிப்பதில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனால் கோலிவுட்டின் அடுத்த தளபதி யார்? என்ற டாபிக் தான் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், தனுஷ், சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர்களில் ஒருவர் தான் அடுத்த தளபதி என்றெல்லாம் விவாதிக்க தொடங்கி விட்டார்கள்.

அடுத்த தளபதி :

அதில் முதலில் சிவகார்த்திகேயன் பெயர்தான் அடிபட்டு இருக்கிறது. சமீப காலமாகவே சிவகார்த்திகேயனுடைய நடவடிக்கை எல்லாம் அப்படித்தான் இருக்கிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் பேன்ஸ் மீட் ஒன்றை நடத்தி இருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்த பேன்ஸ் மீட்டில் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பார்க்க வந்திருக்கிறார்கள்.

வைரலாகும் வீடியோ:

சொல்லப்போனால், விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமோ அதே அளவுக்கு நிகராகவே சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள், அடுத்த தளபதி இவர் தான் போலையே என்று ஹாஸ்டேக் உருவாக்கி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் குறித்த தகவல்:

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஆர் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருக்கிறார்கள். ஏலியன் ஜனரில் உருவாக்கப்பட்ட இந்த படம் பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

https://twitter.com/VidTamil/status/1767586573665640845

சிவா நடிக்கும் படங்கள்:

இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த படத்தினுடைய தெளிவாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு இயக்கும் படம் என பிசியாக நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full