ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனா ? Showcase வீடியோவில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படம்

By Siva · 4/8/2023

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இடம் பெற்றிருக்கும் காட்சி குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக ரஜினி நடித்த படம் அண்ணாத்த.

இது அண்ணன்-தங்கை பாச கதையை மையாக கொண்ட படம். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதை அடுத்து ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=Y5BeWdODPqo

இசை வெளியீட்டு விழா:

இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதேபோல் கடந்த வாரம் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மாஸாக பேசியிருந்தார். தற்போது இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

படத்தின் ட்ரைலர்:

அதில் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஆக்ஷனில் இறங்கும் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். தற்போது இந்த டிரைலர் வெளியாகி பல லட்சம் மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் படம் ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் டிரைலரில் சிவகார்த்திகேயன் இடம் பெற்றிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்:

அதாவது, ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலரில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இந்த புகைப்படம் ரஜினியின் வீட்டில் இருக்கிறது. இதனால் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறாரா? இது படத்துக்காக வைக்கப்பட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full