வசூல் வேட்டை நடத்திய டாக்டர் - சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன் ? எத்தனை கோடி தெரியுமா ?
தொலைகாட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமாக பலர் இருக்கிறார்கள். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் மெரினா திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்திருந்தது.
டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நூறு கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் சிவகார்த்தியன் அவர்கள் முதன் முறையாக 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதோடு படம் வெளியான ஒரே மாதத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் இந்த படம் ஒளிபரப்பானது.
இந்த நிலையில் டாக்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்தியன் அவர்கள் இதுவரை தன்னுடைய படத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெற்று வந்தார். தற்போது அதிரடியாக 30 கோடிக்கு தாவியுள்ளாராம். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், சிவகார்த்தியன் அவர்கள் டான் என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.