விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வாய்ப்பை பெற்றறாரா நடிகை திரிஷா ? உண்மை என்ன ?
விஜய்க்கு அழுத்தம் கொடுத்து தான் தளபதி 67 படத்தில் நடிக்கும் வாய்ப்பை திரிஷா பெற்றிருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி – தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.
வாரிசு படம்:
இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய படமாக வாரிசு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தளபதி 67 படம்:
இப்படி ஒரு நிலையில் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. லோகேஷ் இயக்கத்தில் கமலின் நடிப்பில் விக்ரம் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இதுவரை காண அளவிற்கு விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனை அடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயை வைத்து தளபதி 67 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
தளபதி 67 பட வில்லன்கள்:
. இந்த படத்தில் மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆறு வில்லன்களில் சஞ்சய் தத் மற்றும் பிரிதிவிராஜ் என இரண்டு வில்லன்கள் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நான்கு வில்லன்கள் தேர்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. விஜய்- திரிஷா இருவரும் கில்லி, திருப்பாச்சி,ஆதி,குருவி போன்ற படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.
விஜய்யிடம் வாய்ப்பு கேட்ட திரிஷா:
14 ஆண்டுகளுக்குப் பின் விஜயுடன் இணைந்து திரிஷா நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் திரிஷா அவர்கள் தளபதி 67 படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய்க்கு அழுத்தம் கொடுத்து தான் பெற்றிருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜயுடன் சேர்ந்து நடித்தால் தான் தனக்கு முன்பு போல் மார்க்கெட் உயரும் என்று எண்ணி விஜயிடம் இந்த வாய்ப்பை கேட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், விஜயிடம் படத்தில் நடிக்க திரிஷா வாய்ப்பு கேட்டது உண்மை தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.