விஜய் தன்னுடைய ஸ்டைலை மறைந்த நடிகை ஒருவரை பார்த்து காப்பியடித்துள்ளர் என்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வந்தனர்.

முதல் ப்ரோமோ :

இப்படிப்பட்ட நிலையில் தான் படத்தில் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. அந்த ப்ரோமோவில் காலை காட்சியில் சாக்கலேட் தயாரிக்கும் விஜய் இரவு நேரத்தில் வாழ் ஒன்றை தயாரிக்கிறார். பின்னர் அங்கு பல கார்கள் வருகின்றனர். விஜய் வாழில் உள்ள சாக்கலேட்டை சாப்பிடும் படி, Bloody Sweet என சொன்னபடி அந்த ப்ரோமோ முடிந்தது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது.

Advertisement

வைரல் வீடியோ :

இந்நிலையில் விஜய் மற்ற முன்னணி நடிகர்களை போலவே தனக்கென ஒரு தனி ஸ்டாலை ரசிகர்களை கவர்வதற்காக வைத்திருக்கிறார். அந்த வகையில் பபுள் கம்களை இரண்டு முறை வாயில் போடும் ஸ்டாலியை முன்னதாக நடித்த பிகில் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் செய்திருந்தார். இந்த நிலையில் தான் விஜய் தற்போது செய்ததை நடிகை சௌந்தர்யா முன்னரே செய்து விட்டார். அவரை பார்த்து காப்பியடுத்துதான் விஜய் தற்போது இதனை செய்து வருகிறார் என்ற ஒரு வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

விஜய் காப்பியடித்தாரா? :

அந்த வீடியோ பதிவில் ஹாலிகாப்டர் விபத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா இரண்டு முறை பாபுல் கம்மை வாயில் போடுவார். இந்நிலையில் இந்த விடியோவை பகிர்ந்து விஜய்க்கு முன்னதாகவே இதனை நடிகை சௌந்தர்யா செய்துவிட்டார் என்று பதிவிட்டுட்டு வருகின்றார்கள். இவை ஒருபுறம் இருக்க ஹாலிவுட் நடிகரான ஜாக்கி ஜான் “ஆர்மர் ஆஃப் காட்” என்ற படத்திலேயே இவர்களுக்கு முன்னால் செய்து விட்டார் எனவே இவர்கள் இருவரும் ஜாக்கி ஜானை பார்த்துதான் காப்பியடித்துள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement