நடிகையுடன் ஏற்பட்ட நெருக்கத்தில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாரா விஜய் ? ட்விட்டரில் கிளம்பிய புதிய சர்ச்சை.

By Arun · 23/1/2023

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா துறையில் பிரபலமான இயக்குனரின் மகனாக விஜய் இருந்தாலும் அவருடைய படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தோல்வியில் தான் முடிந்தது. பின்னர் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்று பார்த்தால் "பூவே உனக்காக" படம் தான். இந்த படத்திற்கு பின் தான் விஜய் அவர்களுக்கு சினிமா துறையில் பட வாய்ப்புகள் வர தொடங்கின. பின்னர் விஜய்க்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமும் கூடியது.

மேலும்,விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க தீவிர பெண் ரசிகையும் உள்ளார். அதில் ஒருவர்தான் நம்ப சங்கீதா. விஜயின் தீவிர ரசிகையான சங்கீதா விஜயை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்திருக்கிறார். அப்போது விஜய் யின் பெற்றோர்களையும் சங்கீதா சந்தித்து இருக்கிறார். சங்கீதாவை விஜய் பெற்றோர்களுக்கு பிடித்துப் போக சங்கீதாவிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு சங்கீதாவும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு யோசித்து இருக்கும் விஜய் பின்னர் பெற்றோர்களின் ஆசைக்காக சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். 22 ஆண்டுகள் சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் தற்போது மனைவியை பிரிந்துவிட்டதாக செய்திகள் வைரலாகி வருகிறது. மேலும், விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கும் தொடர்பு ஏற்பட்டதால் தான் சங்கீதா விஜய்யை பிரிந்து லண்டன் சென்றுவிட்டார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

சங்கீதா விஜயை பிரிந்ததால் தான் எப்போதும் விஜய்யின் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் சங்கீதா வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் பிரியா அட்லியின் சீமந்த நிகழ்ச்சியிலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை என்றும் செய்திகள் பரவி வருகிறது. இப்படி ஒரு பரபரப்பான விஷயம் ஏற்கனவே பரவி வரும் நிலையில், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில் ஒரு மாற்றம் நடந்துள்ளது.


behindtalkies AMP · Quick view
View full