நயன்தாராவின் கையில் இருக்கும் ஆறாம் விரல் பற்றி தெரியுமா ? பலரும் அறியாத ரகசியம்.

By Rajkumar · 16/12/2020

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில் ஒரு நடிகையாக இருந்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது எல்லாம் ஒரு நடிகையாக அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த நயன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதேபோல இவர் லீடு ரோலில் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனால் வருடத்திற்கு ஒரு படமாவது லீடு ரோலில் நடித்து விடுகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' படமும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை நயன்தாரா தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார் சிம்பு, பிரபுதேவா காதல் துவங்கி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் நயன். இருப்பினும் தற்போதும் லேடி சூப்பர் ஸ்டாராக தான் இருந்து வருகிறார்.

நயன்தாரா பற்றி இத்தனை விஷயங்களை பற்றி நாம் அறிந்தாலும் அவரது இடது கையில் இருக்கும் ஆறாம் விரல் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக ஆறாம் விறல் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டம் என்று தான் சொல்வார்கள் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு கூட ஆறாம் விரல் இருப்பது பலரும் அறிந்த விஷயம் தான். அதே போல தான் நடிகை நயன்தாராவிற்கு இருக்கும் இந்த ஆறாம் விரல் அதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறதாம். இவருக்கு மட்டுமில்லை நயன்தாராவின் பாட்டிக்கு கூட இப்படி ஆறாம் விரல் இருந்திருக்கிறதாம்.

என்னதான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஒரு சில சென்டிமென்டுகளை வைத்து வருகிறார் நயன்தாரா. படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரும் பரிசு கொடுத்தது, திருமண தடை நீங்க கோவிலுக்கு சென்று வந்தது என்று நயனதாரா பல சென்டிமென்டுகளை கொண்டவர் என்று கூறப்பட்டது. அதே போல நயன்தாரா கையில் இருக்கும் இந்த விரலை கூட அவர் சென்டிமெண்டாக தான் வைத்து வருகிறார். ஒரு வேலை அது மருவாக இருந்தால் அதனை அவர் நீக்கி இருப்பார் அல்லவா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full