2 கோடிக்கும் அதிமுகமான பாலோவர்ஸ், இன்ஸ்டாகிராம் மூலம் சமந்தா சம்பாதிக்கும் பணம் எவ்ளோ தெரியுமா ? (இது இருந்தாலே நீங்க செட்டில்)
பொதுவாகவே நடிகர், நடிகைகள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அதிலும் அவர்கள் சோசியல் மீடியா மூலம் தங்களுடைய படங்களை பற்றிய அப்டேட்கள், தனிப்பட்ட விஷயங்களைக் குறித்து பகிர்ந்து வருவார்கள். இப்படி நடிகர்கள் செய்வது எல்லாம் ரசிகர்களுக்காக என்று நினைக்கலாம். ஆனால், உண்மையில் சில நடிகர், நடிகைகள் சோசியல் மீடியாவை சம்பாதிக்கத் தான் வைத்திருக்கிறார்கள். இது பலருக்கும் தெரியாத ஒன்று. ஒரு நடிகரோ, நடிகையோ எத்தனை மில்லியன் டாலர்களை வைத்திருக்கிறார்கள் என்பதை பொருத்து விளம்பர நிறுவனங்கள் பணம் தருகின்றன. குறிப்பாக நடிகர்களை விட நடிகைகள் தான் இதில் அதிகம் சம்பாதித்து வருகிறார்கள்.
மேலும், நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். சினிமாவில் சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்கான சம்பாதித்து வருகிறார்கள். சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் அதிக பணம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் விளம்பரம் செய்வது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.
சோசியல் மீடியா விளம்பரங்கள்:
மேலும், நடிகைகள் அழகு சாதன பொருட்கள், துணிகள், நகைகள், உணவு பொருட்கள் என பல விளம்பரங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்கள். ஆனால், தற்போது மது விற்பனை செய்யும் விளம்பரங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேபோல் சோசியல் மீடியா மூலமும் நடிகைகள் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். அதிலும் முன்னணி நடிகைகளுக்கு இருக்கும் பாலாவேர்ஸ் பொருத்து தான் நிறுவனங்கள் பல லட்சங்களை தருகின்றது. அந்த வகையில் தமிழ் நடிகைகளில் இப்படி விளம்பரப்படுத்தி விட்டு அதிகம் சம்பாதிப்பவர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் சமந்தா.
சோசியல் மீடியாவில் சமந்தா சம்பளம்:
இவர் இதுவரையிலும் 8 முதல் 10 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இனிமேல் இவர் 15 முதல் 20 லட்சம் வரை கேட்கப் போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. சமந்தா அவர்கள் 2 கோடிக்கும் அதிகமான பாலோவர்ஸை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கில் மட்டும் இல்லாமல் தற்போது ஹிந்தியிலும் இவருக்கு வரவேற்பு இருப்பதால் தான் சமந்தா கட்டணத்தை ஏற்றி விட்டதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா.
சமந்தாவின் திரைப்பயணம்:
இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்குப் தான் விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என சமந்தா பணியாற்றி வந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சமந்தா சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தற்போது இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். கடந்த ஆண்டு இருவரும் பிரிய இருக்கிறோம் என்று சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா நடிக்கும் படங்கள்:
இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வந்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து இவர் மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சாகுந்தலம், யசோதா ஆகிய பல படத்தில் சமந்தா பிசியாக நடித்து வருகிறார்.