மேலவளவு முருகேசன் தான் கர்ணனா ? 97 ல் நடந்த இந்த கொடூரமான சம்பவம் தான் இந்த படமா ? இதை பாருங்க.

By Rajkumar · 9/4/2021

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த இன்று வெளியாகி இருக்கிறது.

https://twitter.com/AnAmbedkarite/status/1362650921285476354

இந்த படத்தில் 90களில் நடக்கும் அடக்கு முறை, மற்றும் அதை எதிர்த்து புரட்சி செய்யும் நபராக வருகிறார் கர்ணன். இப்படி ஒரு நிலையில் இந்த படம் 1997 நடந்த உண்மை சம்பவம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் பாபு ரவீந்தர் என்பவர் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து பதிவிட்டிருந்த அவர், மேலவளவு முருகேசன் நம் தலைமுறையின் போராளி. 1996 மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. கள்ளர் சாதி மக்கள், எங்களுக்கு ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரா? என்று சாதி இந்துக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணித்தனர்.

28-12-1996 அன்று நடந்த தேர்தலில் தலித் மக்கள் மட்டும் வாக்களித்தனர் இருந்தும் என்ன பயன் தலித்துகளை தாக்கி வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்றுவிட்டனர். மீண்டும் 31-12-1996ல் கூடுதல் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது மீண்டும் தலித்துகள் மட்டுமே வாக்களித்தனர். இறுதியில் மேலவளவு முருகேசன் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஊராட்சி மன்ற அலுவலகம் கள்ளர் தெருவில் இருந்ததனால் அவர் அலுவலகம் செல்ல முடியாத சூழல். பிறகு சாதி இந்துக்கள் அண்ணன் முருகேசனுடன் நன்றாக பழகி ஊராட்சிமன்ற ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

10-09-1996 தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தலித் மக்கள் பலவித பிரச்சனைகள் சந்தித்தனர் அதில் மூன்று தலித்துகளின் வீடு கொளுத்தப்பட்டது, அவர்களுக்கு நிவாரணம் பெற்றுதர 30-07-1997 அன்று மாவட்ட ஆட்சியர் சந்திக்க அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பும் போது,பேருந்து பழைய கள்ளுக்கடை என்ற இடத்தை நெருங்கியது 30 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய குழு பேருந்தை வழிமறித்து மேலவளவு முருகேசன் உட்பட 7 பேரையும் படுகொலை செய்தனர். முருகேசன் தலையை மட்டும் தனியாக துண்டித்து 1/2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

https://twitter.com/PrinceSpeaking/status/1362712239984152577

90 நாட்கள் மேலாகியம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாததால் அவர்கள் அந்த சமயத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இரண்டு கழகங்களும் போட்டி போட்டு கொண்டு அவர்களுக்கு விடுதலை அளித்தது குறிப்பிடத்தக்கது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கீழ் சிலர், இந்த சம்பவத்தின் செய்தி வெளியான பத்திரிகை செய்தி ப்குதிகளையும் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த படம் 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full