'விஜய்யுடன் Skவை ஒப்பிட்டு இப்படி பேசவே இல்ல' தான் சொல்லாத கருத்தை தலைப்பாக போட்டதை கண்டு sj சூர்யா போட்ட ட்வீட்.

By subhashini · 30/4/2022

விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து விட்டார் என்ற தலைப்பை பார்த்து எஸ் ஜே சூர்யா வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார்.

பின் எஸ் ஜே சூர்யா சொன்ன கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” படத்தை ” இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது. அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார்.

எஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். பின் இவர் ஹீரோவாக நடித்து இருந்த மான்ஸ்டர் படம் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திகில் படத்தில் நடித்து இருந்தார்.

எஸ் ஜே சூர்யா நடிக்கும் படங்கள்:

இந்த படம் வெளியாகி திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்று இருந்தது. மின் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் தற்போது சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து இருக்கிறார்.

https://twitter.com/CinemaVikatan/status/1519943479287296001

எஸ் ஜே சூர்யா அளித்த பேட்டி சர்ச்சை:

இவரின் நடிப்பில் உருவாகி உள்ள இறவாக்காலம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் எஸ் ஜே சூர்யா அவர்கள் பொம்மை போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் எஸ் ஜே சூர்யா அவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் குறித்து பேசி இருந்தார். இதை அந்த சேனல் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து விட்டார் என்று எஸ் ஜே சூர்யா கூறியதாக தலைப்பு வைத்தார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் குழந்தைகளை பிடித்து விட்டார் என்று கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/iam_SJSuryah/status/1519962562355367937

எஸ் ஜே சூர்யாவின் விளக்கம் பதிவு:

மேலும், இதை பார்த்து எஸ் ஜே சூர்யா அதிர்ப்தி ஆகி விட்டார். பின் அதற்கு விளக்கம் கொடுத்து எஸ் ஜே சூர்யா கூறியது, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஃபேமிலி ஆடியன்ஸை பிடித்து விட்டார்கள் என்று தான் சொன்னேன். அதை வேற மாதிரி புரிந்து கொண்டு இப்படி தலைப்பாக வைத்து இருப்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி எஸ் ஜே சூர்யா பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் இந்த டைட்டில் வைத்த சேனலை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full