சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் வசூல் குறித்து வெளியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பின் சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருக்கிறார்.

Advertisement

சாகுந்தலம் படம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பலமொழிகளில் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில்ராஜு தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் 65 லிருந்து 70 கோடி. ஆனால், எதிர்பார்த்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படம் இராமாயணம், மகாபாரதம் போன்ற சீரியல் பார்ப்பது போல இருக்கிறது என்றெல்லாம் ரசிகர்கள் கூறியிருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை ஆந்திரா முழுவதும் தில்ராஜூ தான் வெளியிட்டு இருந்தார். ஆனால், சாகுந்தலம் படம் மிகப்பெரிய அளவில் தோல்வி சந்தித்தது பலருக்குமே அதிர்ச்சி. இந்த படம் 20 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சாகுந்தலம் படத்தின் தோல்வி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய 25 வருட கேரியரிலேயே மிகப்பெரிய அளவு நஷ்டத்தை ஏற்படுத்தியது சாகுந்தலம் படம் தான்.

Advertisement

தில் ராஜூ அளித்த பேட்டி:

சுமார் 60 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை. அதோடு ரிலீசுக்கு முன்பு இந்த படத்தின் ஓடிடி உரிமையை 35 கோடிக்கு விற்று விட்டோம். அது மட்டும் செய்யாமல் இருந்தால் இந்த படம் இன்னும் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறி இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் வாழ்நாள் வசூல் மட்டும் வெறும் ஏழு கோடி தான் செய்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

Advertisement

படத்தின் வசூல் குறித்த தகவல்:

இதனால் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு 22 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் 3டி தொழில்நுட்பத்துடன் இந்த படம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தது. சுமார் 65 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெறும் 7 கோடி மட்டுமே வசூல் செய்து 32 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சொல்லப்போனால் பெரும் படுதோல்வியை இந்த படம் சந்தித்திருப்பது அனைவருக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது.

Advertisement