அஜித் சாருக்கு நான் ரசிகன் ஆனது இப்படித்தான் - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த தகவல்

By subhashini · 10/4/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பின்னணி பாடகர் என்று பன்முகங்களை கொண்டவர். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார். குறிப்பாக இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இதை தொடர்ந்து தற்போது இவர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர்.

குட் பேட் அக்லி படம்:

குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். இன்று பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் அளித்த பேட்டியில், என்னுடைய அப்பா பல வருடங்களாக சினிமா துறையில் உதவி இயக்குனராகத்தான் இருந்தார். ஆனால், அவரால் இயக்குனராக ஆக முடியவில்லை.

ஆதிக் பேட்டி:

அதற்கு பிறகு தான் நான் திரைத்துறைக்கு வந்தேன். நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது எனக்கு 22 வயது தான். அப்போது எனக்கு இருந்த மெச்சூரிட்டியை வைத்து ஒரு படத்தை எடுத்தேன். வருடத்திற்கு சின்ன சின்ன பட்ஜெட் படங்களை செய்து நன்றாக சம்பாதித்து வீட்டை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் போது அஜித் சார் உடன் பழக்கம் ஏற்பட்டது. அனைத்துமே அப்படியே மாற்றி விட்டது. ஒருநாள் நானும் அவரும் வாக்கிங் சென்று கொண்டிருந்தோம்.

https://www.youtube.com/watch?v=KAfl0oQwb4M

அஜித் சொன்னது:

அப்போது அவர், நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸ்க்கு மட்டும் படம் செய்வதை நிறுத்திவிடுங்கள். உங்களால் இன்னும் பெரிய படங்களை செய்ய முடியும். அந்த திறமை உங்களிடம் இருக்கிறது என்று சொன்னார். ஓரு ஸ்டாராக பார்த்து வளர்ந்த ஒருவர் நம்மிடம் இப்படி ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் நிச்சயமாக மாற வேண்டும் என்று நினைத்தேன். நானும் என்னை மாற்றினேன். அது மட்டும் இல்லாமல் என்னுடைய அம்மா அஜித் சாரோட பெரிய ரசிகர். அவர்களுடைய பாடல், படங்கள் என்றால் எங்க அம்மா எல்லா வேலையும் நிறுத்திவிட்டு வந்து பார்ப்பார். நான் அஜித் சாரோட தீனா படத்தை பார்த்தேன்.

https://www.youtube.com/watch?v=ACleC-CL4ZQ

அஜித் பற்றி சொன்னது:

அந்த படம் தான் என்னை ரொம்பவே கவர்ந்தது. அப்போதிலிருந்தே நான் அஜித் ரசிகராக மாறிவிட்டேன். அதற்கு பிறகு தான் அவருடைய பர்சனல் சம்பந்தமான விஷயங்களை எல்லாம் கேள்விப்படும்போது இன்னும் அதிகமாக பிடித்தது. உண்மையிலேயே அஜித் சார் ரொம்ப ரொம்ப அரிதான நபர். அவரைப்போல யாருமே இருக்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். யாரையும் புண்படுத்த மாட்டார். யாரைப் பற்றியும் தவறாக பேச மாட்டார். நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக பார்க்க வேண்டும். முடிந்தால் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால், உதவி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உதவி செய்யாமல் இருக்க கூடாது போன்ற நிறைய குணங்களைக் கொண்டவர். அவை எல்லாமே தான் என்னை அவருடன் ஆழமாக இழுத்துச் சென்றது என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full