இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மதராஸ்பட்டினம். இந்த படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் போது மதராசப் பட்டினத்தில் வசிருந்த சலவைத் தொழிலாளிக்கும் அப்போது சென்னை ஆளுநராக இருந்த புதல்வி எமி ஜாக்சனுக்கு இடையே நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டது.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இப்படத்தின் மூலம் தான் எமி ஜாக்சன் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.இவர் முதலில் மாடலாக இருந்தார். இந்நிலையில் மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உலகம் முழுவதும் புகழ் பெற்ற பேட் பாய்ஸ் பார் லைஃப் என்ற படத்தின் நடிகை ‘வனிஷா ஹுட்ஜென்ஸ்’ (vanessa hudgens) என்பவரை தான் மதராசப்பட்டினம் படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் கேட்டாராம் இயக்குனர் விஜய்.

இதையும் பாருங்க : லண்டனில் இருக்கும் அருண் விஜய்யின் அக்கா மகள் நீச்சல் குளத்தில் கொடுத்த போஸ்.

Advertisement

ஆனால், அவர் 7 கோடி சம்பளம் கேட்டதாகவும், படத்தின் பாதி பட்ஜட்டில் சம்பளம் கேட்ட காரணத்தினால் தான் எமி ஜாக்சனை தேர்வு செய்தாராம் இயக்குனர் ஏ.எல். விஜய்.அதே போல இந்த படத்தில் வயதான எமி கதாபாத்திரத்தில் வந்த பாட்டி கூட லண்டனை சேர்ந்தவர் தானாம். அது குறித்து பேசியுள்ள ஏ எல் விஜய், லண்டனில் ரவுண்ட் முகம் கிடைப்பது ரொம்ப கடினம். மேனஜர் மூலம் தான் அந்த லேடியை பார்த்தேன், அவங்க மிகவும் வசதியான லேடி, அவங்க தங்கி இருந்ததே நம்ம போயஸ் கார்டனை விட 10 மடங்கு பெரிய ஒரு அபார்ட்மெண்டில் தான் அவர் தங்கி இருந்தார்.

வீடியோவில் 22 : 25 நிமிடத்தில் பார்க்கவும்

அவங்க முதலில் இந்த படத்தில் நடிக்க விருப்பமே இல்லை. பின்னர் கதையை படித்த பின்னர் அவருக்கு பிடித்து விட்டது. பின்னர் கொஞ்ச நேரம் ஒரு பார்க்கில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொஞ்ச நேரம் கழித்து ஓகே சொன்னாங்க. ஏன்னு கேட்டதற்கு அந்த பெஞ்சில் என்னுடைய கணவரின் பெயர் இருக்கிறது, நான் எந்த முடிவை எடுத்தாலும் இங்கு ஒக்காந்து தான் எடுப்பேன் என்று சொன்னார். அப்படி தான் அவங்க எனக்கு கிடைச்சாங்க என்று கூறியுள்ளார் ஏ எல் விஜய்.

Advertisement
Advertisement