கட்சி பெயரில் இருக்கும் இலக்கண பிழை, எழுத்து பிழைய கூட விடுங்க - விஜய் கட்சி பெயருக்கு பின்னால் இருக்கும் அரசியல் குறித்து அமீர்.

By Rajkumar · 4/2/2024

விஜயின் அரசியல் குறித்து இயக்குனர் அமீர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது.

https://twitter.com/actorvijay/status/1753323152216604677

அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.

விஜய் அரசியல்:

இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

https://twitter.com/vaisu_tweets/status/1753872997306278365

விஜய் எடுத்துள்ள முடிவு :

இதனை அடுத்து விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார்.

அமீர் பேட்டி :

விஜய் கட்சி பெயரை அறிவித்ததில் இருந்த அவரது கட்சி குறித்த விவாதம் தான் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் விஜய்யின் கட்சி பெயரில் 'தமிழக வெற்றி கழகம்' என்பதற்கு பதிலாக 'தமிழக வெற்றிக் கழகம்' என்று தான் வர வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இது குறித்து பேசி இருக்கும் அமீர் ' அவரது அறிக்கையில் அனைத்தையும் கலந்த ஒரு மிச்சர் போல இருக்கிறது. எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது எழுத்துப்பிழை இலக்கிய பிழை அனைத்தையும் கூட விட்டு விடுவோம் தமிழகமா தமிழ்நாடா என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்

https://twitter.com/Esalacupnamdea/status/1753420073581301850

தமிழகமா தமிழ்நாடா? :

அது தமிழ்நாடு தான் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.தமிழகம் என்று ஏன் உச்சரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் விஜய் போன்ற ஒருவர் அடுத்த தலைமுறைக்கு என்ன கற்றுக் கொடுக்க போகிறார் என்பது முக்கியம். அண்ணா சொல்லிக் கொடுத்ததை தான் இன்று திராவிட கட்சிகள் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இதில் விஜய் என்ன தன்னுடைய ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள நான் ஆவலுடன் இருக்கிறேன். அவர் தமிழ்நாடு என்று சொல்லித் தரப் போகிறாரா? தமிழகம் என்று சொல்லித் தரப் போகிறாரா? என்பதை பார்ப்போம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full