எளிமையான முறையில் இயக்குனர் அமீர் மகளின் திருமணம் நடந்து முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இன்று இவருடைய மகள் அனி நிஷாவின் திருமணம் தான் மதுரையில் நடந்து இருக்கிறது. மிக எளிமையான முறையில் இயக்குனர் அமீர் தன் மகளின் திருமணத்தை நடத்தி இருக்கிறார்.

மதுரையில் கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் சேரன் , வெற்றிமாறன், சசிகுமார் , சமுத்திரக்கனி , சரவணன், கரு.பழனியப்பன், எஸ் ஆர் பிரபாகரன், சுப்பிரமணியம் சிவா மற்றும் நடிகர்கள் ஆர்யா , பொன்வண்ணன் , கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் சினேகன் என பலர் கலந்து கொண்டு இருந்தார்கள்.

Advertisement

அமீர் மகள் திருமணம்:

மேலும், தன் மகளின் திருமணத்திற்கு வந்த பிரபலங்களை இயக்குனர் அமீர் அன்போடு வரவேற்று இருந்தார். திருமண மேடையில் மணமகன், மணமகளிடம் திருமணம் சம்மதம் கேட்ட பிறகு தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு வந்த இயக்குனர்கள், நடிகர்கள் பலருமே மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். திருமணம் முடிந்த பிறகு சிறப்பு வழிகாட்டியின் போது இயக்குனர் சமுத்திரக்கனி மனமுருக கைகூப்பி வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டிருந்தார்.

பிரபலங்கள் வாழ்த்து:

இதை அடுத்து பிரபலங்கள் பலரும் மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு வந்தவர்கள் இடமிருந்து எந்த ஒரு பரிசு பொருட்களையும், மொய் பணமும் மணமகள், அமீர் யாரும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமீர் மகளின் திருமண புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அமீர் திரைப்பயணம்:

மேலும், அமீர் அவர்கள் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பொறியியல் படிப்பு படித்து முடித்து சினிமாவில் நுழைந்தார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். அதிலும் இவர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் பணியாற்றியிருந்தார். பின்னர் இவர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

Advertisement

அமீர் குறித்த தகவல்:

முதல் படமே இவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது. இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார்.

Advertisement