கன்னட மொழி பற்றி பேசுவது தேவையில்லாதது - கமலுக்கு ஆதரவாக இயக்குநர் அமீர் அளித்த பேட்டி
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல். தற்போது கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், முதல் நாள் முதல் காட்சியை கமலஹாசன் ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குனர் அமீர் தக் லைப் படத்தை பார்த்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் கேக் வெட்டியும் கொண்டாடியிருக்கிறார். அதற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே படத்திற்கு மணிரத்தினம், கமல் சாரும் வந்தார்கள்.
இயக்குனர் அமீர் பேட்டி:
நாயகன் படத்தை கல்லூரி காலத்தில் எப்படி ஒரு ரசிகனாக பார்க்க முதல் நாள் வந்தேனோ, அதேபோல் தான் தக் லைப் படத்தையும் ஒரு ரசிகனாக பார்க்க வந்திருக்கிறேன் என்றேன். உடனே செய்தியாளர்கள் கன்னட மொழி விவகாரம் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அமீர், அது ஒரு தேவையில்லாத அரசியல். அவர் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை, குறைத்தும் மதிப்பிடவும் இல்லை. கன்னடத்தில் ஏழு பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் கன்னட மொழி குறித்து பேசுவது தேவையில்லாத ஒன்று என்று கூறியிருக்கிறார்.
https://youtu.be/h80ZgztEtT0?si=v-PB-92Rmxo4ukmj
கர்நாடக சர்ச்சை:
கடந்த சில வாரங்களாக கமலின் கன்னட மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தக் லைப் படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே. சிவராஜ்குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால் தான் உயிரே உறவே தமிழே என்று பேச தொடங்கினேன். உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது. எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது என்று கூறி இருந்தார். இப்படி கமலஹாசன் பேசியிருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.கமல் '
கமல் வழக்கு:
காரணம், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று அவர் கூறியிருப்பார். இதனால் கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் வெடித்திருக்கிறது. கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட தீவிர கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருக்கிறார்கள். இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டாலும் கர்நாடகாவில் அவருடைய படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சில அமைப்புகள் அழைப்பும் விடுத்திருக்கின்றது.
நீதிபதி சொன்னது:
இதை அடுத்து கமலின் தக் லைப் படம் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. பின் கமல் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா நீதிபதி, மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிந்திருக்கும். மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தார். இதற்கிடையில் கமலஹாசன், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார். பின் இந்த வழக்கை ஜூன் 10ஆம் தேதி ஒத்து வைத்திருக்கிறார்கள்.