சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் கதை இது தான்- ஏ.ஆர் முருகதாஸ் எஸ்க்குளூசிவ் தகவல்

By subhashini · 19/2/2025

மதராசி படம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'மதராஸி' என்று பெயர் வைத்திருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த பாணியில் இந்த படம் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஏ.ஆர் முருகதாஸ் பேட்டி:

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் மதராசி படம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அளித்த பேட்டியில், இந்த படம் வட இந்தியர்கள் உடைய பார்வையில் இருந்து தான் தொடங்குகிறது. தென்னிந்தியர்களை வட இந்தியர்கள் மதராசி என்ற வார்த்தையை வைத்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். தற்போது அந்த வார்த்தையை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது. இந்த படம், வட இந்தியர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் கதை.

சிவகார்த்திகேயன் பற்றி சொன்னது:

அதனால் தான் இந்த தலைப்பு வைத்தோம். சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். இந்த படம் நிச்சயமாக அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இந்த படத்தில் அவருக்கு ரக்கடான லுக் இருக்கு. இந்த கதாபாத்திரம் அவருடைய தோற்றத்தை பற்றி பெரிதும் சிந்திக்காத வகையில் இருக்கும். கஜினி, துப்பாக்கியை போல இந்த படத்திலும் ஒரு தனித்துவமான எலமெண்ட் இருக்கிறது. இப்போது அதைப்பற்றி சொல்ல முடியாது. சிவகார்த்திகேயனுடைய கதாபாத்திரமும் வழக்கமானது போல் இருக்காது. பெரிய ஹீரோ திரைப்படங்களாக இருந்தாலும் அதில் வில்லனாக நடிப்பதற்கு வித்யூத் ஜம்வால் முடியாது என்கிறார்.

படம் குறித்து சொன்னது:

இதனால் நான் அவரிடம் தொடர்பு கொண்ட போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று வித்யூத் ஜம்வால் ஒத்துக்கொண்டார். அவரை சந்திக்கும்போது கதை எப்படி இருந்தாலும் நடிக்கிறேன் என்று சொன்னார். அதற்கு பிறகு நான் அவரிடம் கதை சொன்னேன். உடனே அவர் என்னை அணைத்துக் கொண்டார். பிஜூ மேனன், ஷபீர் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்னும் 12 நாட்களில் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்துவிடும். இந்த கமர்சியல் திரைப்படம் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full