பசியோட இருக்காதேன்னு பண உதவி செய்தவர் - மேடையில் கண் கலங்கி எமோஷனலாக பேசிய ஏ.ஆர். முருகதாஸ்

மேடையில் கண் கலங்கி பேசிய ஏ.ஆர். முருகதாஸ்

By subhashini · 13/6/2026

தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கியிருக்கிறார். இயக்குனர் ஏற்கனவே பூ, டிஷ்யூம், பிச்சைக்காரன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் உட்பட பலருமே கலந்து கொண்டு படம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

நூறு சாமி படம்:

அப்போது விழாவில் பேசிய இயக்குனர் இயக்குனர் எ ஆர் முருகதாஸ், நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை தான் இந்த நூறு சாமி படம். டிஷ்யூம் படத்தில் விஜய் ஆண்டனி அறிமுகம் செய்ததற்காக ஒரு பெரிய ஹீரோவின் வாய்ப்பை இழந்தார் சசி. சுவாசிகா இந்த படத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த வருடம் அதிக விருதுகளை வெல்ல தாய்க்கிழவி படத்திற்காக ராதிகா அவர்களும், நூறு சாமி படத்துக்காக சுவாசிகா ஆகிய இருவருக்கும் போட்டியாக இருக்கும்.

ஏ ஆர் முருகதாஸ் பேட்டி:

எனக்கு முன்பே சசி இயக்குனர் ஆகிவிட்டார். ஒரு நாள் சசியிடம் நான் படம் பண்ண போகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர், வேலையை விட்டு இயக்குனர் வாய்ப்பு தேடுகிறாய். பசியோடு மட்டும் இருந்து விடாதே. உனக்கு எப்போது என்ன தேவை என்றால் என்னை கேளு. நான் உனக்கு பண உதவி செய்கிறேன் என்றார். நாம் உதவி கேட்கும் சூழல் வருகிறதோ, இல்லையோ ஆனால் நம்மை பசியோடு வாட விடாமல் உதவ ஒருவர் இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய தைரியம். அந்த சந்தோஷத்தை நான் கஷ்டப்படும் நேரத்தில் எனக்கு கொடுத்தார்.

சசி பற்றி சொன்னது:

தீனா படத்தை பாதியில் கைவிடலாம் என்று முடிவெடுக்கும் நேரத்தில் சசி எனக்கு வாழ்த்துக்கள் சொன்னார். ஆனால், நான் படம் நடக்காது என்றேன். படத்தில் சில விஷயங்கள் எனக்கு ஒத்துப் போகவில்லை. அதனால் படம் நடப்பதில் சிக்கல் இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு சசி, படம் எடுக்க முடியவில்லை என்று விலகினாலே அது தோல்விக்கு சமம். முடிந்தவரை போராடு. நமக்கு 70% படம் சரியாக வருகிறது என்றால் அது ரசிகர்களுக்கு 100% சரியாக இருக்கும் என்று ஊக்கப்படுத்தினார். தீனா படத்தை நான் தொடர காரணமே சசி தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full