'மதுர வீரன் தானே' பாடலை வைத்ததற்கு காரணம் இதுதான் - வீர தீர சூரன் பட இயக்குனர் பகிர்ந்த தகவல்

By subhashini · 4/4/2025

வீர தீர சூரன் 2 படம் பற்றி இயக்குனர் அருண்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வீர தீர சூரன் 2. இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படம் HR Pictures தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் வெளியாக பல பிரச்சனைகள் நடந்தது. பின் இந்த படத்தின் ரிலீஸ்க்கு திடீரென்று தடை விதிக்கப்பட்டது. பின் அந்த பிரச்சனையை ஒரு வழியாக முடித்து கடந்த வாரம் தான் வீர தீர சூரன் 2 படம் வெளியிடப்பட்டது. லேட்டாக படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு படமும் நல்ல வசூல் செய்து வருகிறது.

வீர தீர சூரன் 2 :

இனி வரும் நாள்களில் மிக பெரிய வசூல் சாதனை வீர தீர சூரன் 2 செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் விக்ரம் நடித்த தூள் படத்தில் இருந்து மதுரவீரன் தானே என்ற பாடல் கிளைமாக்ஸில் வைத்திருப்பார்கள். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த பாடல் வந்தவுடனே திரையரங்கே அதிரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் அருண்குமார், அந்த பாடலை வைக்க வேண்டும் என்று நான் கதை எழுதும்போதே முடிவு செய்ததுதான்.

https://www.youtube.com/watch?v=y3waNTjuDiQ

அருண்குமார் பேட்டி:

படம் முழுவதும் திருவிழாக்களில் இருந்து தான் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். அதேபோலதான் இந்த பாடலையும் நேரடியாக குழாயில் இருந்து ஒலிக்க வேண்டும் என்று வைத்தோம். ஆனால், இந்த காட்சிக்கு முந்தைய காட்சிகளில் பாடல் ஒலிக்கும் சூழலுக்கு சரியாகப் பொருந்தவில்லை. ஒரே இரைச்சல் ஆக இருந்தது. அதன் காரணமாகத்தான் அந்த இடத்தில் சுதந்திரம் எடுத்துக்கொண்டு பாடலை அங்கு சேர்த்தோம். படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் நேரத்தில் தான் இந்த முடிவை மாற்றி தனியாக பாடலை இணைத்தோம் என்று கூறியிருக்கிறார்.

படத்தின் கதை:

படத்தில் எஸ். ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ரவி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையுமே என்கவுண்டர் செய்ய திட்டம் போடுகிறார். பெரிய தாதாவாக ரவி இருக்கிறார். இவருடைய மகன் தான் கண்ணன். ரவி தன் மகன் கண்ணனை எப்படியாவது எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று விக்ரமிடம் உதவி கேட்கிறார்.

விக்ரமை வைத்து எஸ்.ஜே சூர்யாவை கொன்று விட்டால் தன்னுடைய மகனை காப்பாற்றி விடலாம் என்று தாதா ரவி நினைக்கிறார். விக்ரமும் இது தெரியாமல் ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? விக்ரம் எதற்காக தாதா ரவி சொன்னதற்கு ஒத்துக்கொண்டார்? எஸ்.ஜே சூர்யா ஏன் ரவி மற்றும் கண்ணனை கொல்ல நினைக்கிறார்? இவர்களுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full