எங்கள் வீட்டுக்கு வரும் புது உறுப்பினர், ப்ரியா-அட்லீ சொன்ன குட் நியூஸ் - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 20/1/2026

அட்லீ-பிரியா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

அட்லீ குறித்த தகவல்:

பின் அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்திய அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இதை அடுத்து அட்லீ அவர்கள் அல்லு அர்ஜுனனை வைத்து படம் இயக்குகிறார். பீரியட் கதையை கொண்ட இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

அட்லீ – ப்ரியா திருமணம்:

இதற்கிடையில் அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ப்ரியா அவர்கள் விஜய் டிவி கனா காணும் அவர்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். பின் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா, அட்லீயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பிரியா நடிப்பதை நிறுத்தி விட்டார். பிரியா மற்றும் அட்லி இருவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் கழித்து மகன் பிறந்து இருக்கிறார்.

https://www.youtube.com/shorts/vUlVeizkaTM?si=qlq18TYULcLX4lXB

மீண்டும் கர்ப்பமான ப்ரியா அட்லீ:

இப்படி இருக்கும் நிலையில் அட்லீ- பிரியா இருவரும் சொல்லியிருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்கள், எங்கள் புதிய உறுப்பினரின் வருகையால் எங்கள் வீடு இன்னும் இனிமையானதாக மாறப்போகிறது. ஆம், நாங்கள் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களும் அன்பும் பிரார்த்தனைகளும் தேவை. அன்புடன் பிரியா, அட்லீ, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூஃபி என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full