சந்தோஷத்தில் அட்லீ-ப்ரியா சொன்ன விஷயம், என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துகள்

By subhashini · 20/4/2026

அட்லீ-பிரியா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

அட்லீ குறித்த தகவல்:

பின் அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்திய அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இதை அடுத்து அட்லீ அவர்கள் அல்லு அர்ஜுனனை வைத்து படம் இயக்குகிறார். பீரியட் கதையை கொண்ட இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அட்லீ – ப்ரியா திருமணம்:

இதற்கிடையில் அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ப்ரியா அவர்கள் விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். பின் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா, அட்லீயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பிரியா நடிப்பதை நிறுத்தி விட்டார். பிரியா மற்றும் அட்லி இருவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் கழித்து மகன் பிறந்து இருக்கிறார்.

https://www.youtube.com/shorts/vUlVeizkaTM

ப்ரியா-அட்லீ குழந்தை:

பின் சமீபத்தில் பிரியா அட்லீ மீண்டும் கர்ப்பமான விஷயத்தை சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். இதை அடுத்து பிரியா அட்லீக்கு இரண்டாவது வளைகாப்பு விழா மும்பையில் சிறப்பாக நடைபெற்று இருந்தது. அதில் தளபதி விஜய்யும் கலந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று அட்லீக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ப்ரியா அட்லீக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை அட்லீ சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full