அம்பானி திருமணத்தில் அட்லீ போட்டு காட்டிய படம்- பிரம்மிப்பில் இந்திய சினிமா

By Rajkumar · 18/7/2024

அம்பானி வீட்டு திருமணத்தில் இயக்குனர் அட்லீ செய்திருக்கும் மாஸ் விஷயம்தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகுதான் இவர் இயக்குனர் ஆனார். மேலும், இவர் சினிமாவில் இயக்குனர் மட்டுமில்லாமல் எழுத்தாளர் என பல முகங்களை கொண்டு திகழ்கிறார்.

இவர் 'ராஜா ராணி' படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். பின் இவர் தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார். 'பிகில்' படத்தை தொடர்ந்து அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து 'ஜவான்' படத்தை இயக்கியிருந்தார். உலக அளவில் இப்படம் ரூபாய் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து பட குழுவினர் ஜவான் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினார்கள்.

ஜவான் படம் :

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்று, அங்கு ஒரு தமிழ் இயக்குனராக இவ்வளவு பெரிய சாதனை செய்வது எளிதான விஷயம் இல்லை. இப்படத்தின் வெற்றி இந்திய அளவில் அட்லீக்கு பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது. சமீபத்தில் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணத்திற்கு தனது மனைவியுடன் இயக்குனர் அட்லீ கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபத்தில் கூட வைரலாக இருந்தது. மேலும் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டஅட்லீ, அங்கு மாஸ் சம்பவம் ஒன்று செய்து இருக்கிறார்.

அட்லீ செய்த சம்பவம்:

அதாவது திருமணத்தில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லீ, திருமணத்திற்காக 10 நிமிடங்கள் கொண்ட அனிமேஷன் படம் ஒன்றை இயக்கியுள்ளார். மேலும் திருமணத்தில் திரையிடப்பட்ட அப்படத்திற்கு அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளாராம். இந்த விஷயத்தை அந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்தத் தகவல் தற்போது அட்லீயை இந்திய ரசிகர்கள் மத்தியில் வியந்து பார்க்க வைத்துள்ளது.

ஆனந்த அம்பானி - ராதிகா திருமணம்:

கடந்த வாரம் இருந்து சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த அம்பானியின் திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலகில் மிகப் பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த அம்பானிக்கு தான் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று இருந்தது. தொழிலதிபர் வீரன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை தான் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து இருக்கிறார்.

திருமணத்தில் பிரபலங்கள்:

கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் தான் திருமண விழா தொடங்கியது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இத்திருமணத்தின் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருமணத்தில் இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், இந்தியாவின் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச பிரபலங்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 500 கோடி வரை திருமண செலவுகள் ஆனதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full