அசிஸ்டன்ட் இயக்குனர் To ஆயிரம் கோடி கிளப் இயக்குனர் - அட்லீயின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா ?

By subhashini · 22/9/2023

இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். மேலும், இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் சினிமா எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார்.

இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜவான் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால், சிலர் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். இதை அஜித் நடித்த ஆரம்பம் படம் மாதிரியே இருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு இருந்தார்கள். மேலும், ஜவான் படம் படுதோல்வி அடைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் அட்லீயை பங்கமாக கலாய்த்து இருந்தார்கள்.

படத்தின் வசூல்:

இது ஒரு பக்கம் இருக்க, பட குழுவினர் ஜவான் படத்தின் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடியிருந்தார்கள். வழக்கம் போல் இந்த படத்தின் வெற்றிவிழாவிற்கு நயன்தாரா வரவில்லை. இந்த படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிரடியான படம் இந்தியில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அட்லீ குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் இந்த மாதிரியான படங்கள் வெளியாவது ரொம்ப கஷ்டம் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதனை அடுத்து சல்மான்கான், ஆமீர்கான், ரித்திக் ரோஷன் போன்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் களுடன் அட்லீ பணியாற்ற இருப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் அட்லீயே விஜய்- ஷாருக்கான் இணைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக கூறி இருந்தார்.

அட்லீ சொத்து மதிப்பு:

மேலும், ஜவான் படத்திற்காக அட்லீ முப்பது கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு படம் ஹிட் ஆனாலே நடிகர்களின் சொத்து விவரம் தான் இணையத்தில் உலா வரும். அந்த வகையில் தற்போது அட்லியின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 50 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full