தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. சமந்தா, தனுஷ், இமான் போன்ற தமிழ் சினிமாவின் பிரபலமான நபர்கள் சமீபத்தில் தான் விவாகரத்து அறிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான பாலா தன் மனைவியை விவகாரத்து செய்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார்.

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால் இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மேலும், இவருடைய படத்தில் ஹீரோனா— ஆக்ஷன்,மாஸ்; ஹீரோயினினா– அழகாகவும்,வெள்ளையாகவும் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.

Advertisement

பாலாவின் வெற்றிப்படங்கள் :

மேலும், இவர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தை முதன் முதலாக இயக்கினார். அதோடு இவர் இயக்கிய முதல் படத்திலேயே மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார். மேலும்,அவர் மீது நல்ல நம்பிக்கையும் எழுந்தது. அதற்கு பிறகு இயக்குனர் பாலா அவர்கள்” நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார்” உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

விருதுகளுக்கு சொந்தக்காரர் :

மேலும், பாலா அவர்கள் பொதுவாக சினிமா துறையில் மிக கோபமாக, டெரராக இருப்பார் என்று தான் அனைவரும் சொல்வார்கள். ஆனால், இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் நகைச் சுவையான மனிதர் என்று அவருடைய நண்பர்கள் சொல்வார்கள். இதுவரை பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகளையும், 13 மாநில விருதுகளையும், 15 பிலிம்பேர் விருதுகளையும், 14 உலக அளவிலான விருதுகளையும் பெற்று உள்ளது.

Advertisement

மனைவியை பிரிந்த பாலா :

இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பாலா தன் மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertisement

மகளை கொஞ்சிய பாலா :

இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து கிடைக்கப்பெற்று இருக்கிறது. இதன் மூலம் தன் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு விடைகொடுத்துள்ளார் பாலா. இப்படி ஒரு நிலையில் பாலா மற்றும் முத்து மலர் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டனர். அப்போது தன் மகளை கண்ட பாலா அவரை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement