வணங்கான் படத்தில் சூர்யாவை நீக்கி அருண் விஜயை நடிக்க வைக்க இது தான் காரணம் - இயக்குனர் பாலாவின் பளீச் பதில்
சூர்யா-அருண் விஜய் பற்றி இயக்குனர் பாலா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்பு இந்த படத்தில் சூர்யா தான் ஹீரோவாக கமிட்டாகி இருந்தார். படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்தது. ஆனால், திடீரென அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக தகவல் வந்தது. ஆனால், சூர்யா ஏன் விலகினார்? என்ற காரணத்தை மட்டும் இருவரும் சொல்லவில்லை.
வணங்கான் படம்:
அதற்கு பின் இந்த படத்தில் ஹரோவாக அருண் விஜய் நடித்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. சமீபத்தில் தான் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா, இயக்குனர் பாலாவின் 25 வருட சினிமா பயணத்தை பாராட்டியும் விழா எடுக்கப்பட்டது.
பாலா பேட்டி:
அதில் பாலா இயக்கத்தில் நடித்த அனைத்து ஹீரோக்களும் ஹீரோயின்களும் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்கள். இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு வணங்கான் பட ப்ரமோஷனுக்காக இயக்குனர் பாலா பல்வேறுப் பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் பாலா, அருண் விஜய் இயக்குனர் ஏ.எல் விஜய் உடன் பணியாற்றி இருந்தார். அப்போது அவர் தான் அருண் விஜயை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.
https://youtu.be/_sHEJ-h5714?si=5KvDUx7b7Y7GhW4d
அருண் விஜய் நடிக்க காரணம்:
அதற்கு பிறகு தான் நான் அருண் விஜயை நேரடியாக சந்தித்து பேசி இருந்தேன். அவர் என்னிடம் பேசிய விதமும், என்னிடம் நடந்து கொண்ட விதம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் தான் அவருடன் சேர்ந்து பணியாற்றலாம் என்று முடிவு செய்து தான் வணங்கான் படத்தில் நடிக்க வைத்தேன். அதேபோல் சூர்யாவிற்கும் எனக்கும் எந்த பிரச்சினையுமே இல்லை. சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலக ஒரே காரணம் மக்கள் கூட்டம் தான்.
சூர்யா விலக காரணம்:
கன்னியாகுமரியில் சூட்டிங் நடக்கும் போது பயங்கர கூட்டமாக இருந்தது. ஷூட்டிங் நடத்தவே முடியவில்லை. அந்த அளவுக்கு கூட்டம் சேர்ந்தது. அதனால்தான் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது. இனி அவரை வைத்து படம் எடுத்தால் சரியாகாது என்று தான் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். மற்றபடி வேற எந்த காரணமும் கிடையாது. இதை நான் தான் வெளியில் சொல்லவே வேண்டாம். யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றேன். எனக்கு சினிமாவில் ரொம்ப பிடித்த நடிகர்களில் சூர்யா தான் முதலிடத்தில் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.