விஜய் வந்தா நான் ஏன் எந்திரிக்கணும், பல வருட சர்ச்சைக்கு 'வணங்கான்' பட இயக்குனர் பாலா விளக்கம்

By ·

பல வருட சர்ச்சைக்கு இயக்குனர் பாலா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/shorts/qyJbjOr6AYA

பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் வணங்கான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். வணங்கான் படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது.

வணங்கான் ப்ரோமோஷன் :

அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வணங்கான் பட ப்ரமோஷனுக்காக இயக்குனர் பாலா பல்வேறுப் பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில், விஜய்யை தான் அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஒரு விருது வழங்கும் விழாவில், விஜய் வரும்போது அனைவரும் எழுந்து நின்று வரவேற்பார்கள். ஆனால், பாலா மட்டும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பார். அது விஜய்யை அவமதிப்பதற்காக அவர் செய்த செயல் என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிகழ்வு குறித்து இயக்குனர் பாலா எந்த ஒரு மேடையிலும், பேட்டியிலும் பேசியதில்லை.

பாலா கொடுத்த விளக்கம் :

இந்நிலையில் வணங்கான் பட ப்ரமோஷனுக்காக அளித்த பேட்டியில் அவர் முதல் முறையாக அந்த நிகழ்வு குறித்து பேசியிருக்கிறார். அதில், அந்த விஷயம் நியூசாக ஆக்கப்பட்டிருக்கு. அதை எனக்கு அறியாமையே நடந்தது. அப்படியே இருந்தாலும் நான் ஏன் எழுந்து நிற்கணும். விஜய் என்னுடைய எவ்வளவோ வயசுல சின்ன பையன் தானே. நான் ஏன் எழுந்து நிற்கணும். எழுந்து நிற்கவில்லை என்பது கவனக் குறைவாக கூட இருக்கலாம். வேண்டுமென்றே ஒருவரை அவமானப்படுத்தனும் என்பது என்னுடைய எண்ணம் கிடையாது என்று கூறியுள்ளார்.

விஜய் குறித்து பாலா :

இருந்தாலும் நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் நடிகர் விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, ஒரு முறை என் குழந்தை விளையாடிட்டு இருக்கிறா. அப்போது அவர் அவருடைய மனைவி எல்லாம் உட்கார்ந்துட்டு இருந்தாங்க. அப்போ என் மகளுக்கு விஜய் யார் என்று தெரியாது. அது வேகமாக போயிட்டு விஜய் மடியில் உட்கார்ந்துடுச்சு. அப்போ கேமரா எடுத்தவர், உடனே என்னை பார்த்து, ஒரு செல்ஃபி எடுத்துக்கிட்டுமா என்று கேட்டார். அந்த அளவு அவர் ஒழுக்கமான ஆளு.

வதந்திகள் குறித்து :

அப்படிப்பட்டவரை நான் எதற்கு வேண்டுமென்றே இன்சல்ட் பண்ணப் போறேன் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த மாதிரி என்னை குறித்து நிறைய வதந்திகள் வந்துகிட்டு இருக்கு. அதற்கெல்லாம் நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டால் தினமும் விளக்கம் கொடுத்துக்கிட்டே தான் இருக்கணும். வேலை பார்க்க முடியாது என்று இயக்குனர் பாலா பகிர்ந்து இருக்கிறார். பல வருட சர்ச்சைக்கு தற்போது இயக்குனர் பாலா விளக்கம் அளித்திருக்கும் வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை