'உனக்கு ஏன் இந்த கொடூரமான புத்தி' - சேது படத்தைப் பார்த்துவிட்டு பாலாவை திட்டிய பாலு மகேந்திரா
'சேது' படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலாவிடம் பாலு மகேந்திரா கூறி இருக்கும் விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் சிஷ்யன் ஆவார். இவர் இயக்கிய முதல் படம் 'சேது'. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார்.
தற்போது இவர் 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். வணங்கான் படத்தை தரைப்பாளர் சுரேஷ் காமாட்சியும், இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது.
பாலா பேட்டி:
இந்நிலையில் இயக்குனர் பாலா படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து வருகிறார். அந்த பேட்டியில் சேது திரைப்படத்தை பார்த்து பாலு மகேந்திரா கூறியது பாலா பகிர்ந்து இருக்கிறார். அதில், சேது திரைப்படத்தை பார்த்த பாலு மகேந்திரா, அங்கு படக்குழுவினர் இருந்த காரணத்தால், சபைக்காக பாலா இயக்கிய திரைப்படத்தை பார்க்காமலேயே இறந்து போய் விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், நல்ல வேலையாக நான் அவன் இயக்கியப் படத்தை பார்த்து விட்டேன் என்று கூறினாராம்.
https://www.youtube.com/watch?v=j8e8vgUvN74&t=326s
பாலுமகேந்திரா சொன்ன விஷயம் :
ஆனால், அதற்குப் பிறகு அவர் அலுவலகத்திற்கு பாலாவை அழைத்து, பாலா உனக்கு ஏன் இவ்வளவு கொடூர புத்தி. பாவம் படிக்கிற ஒரு பிராமணப் பெண். அவளே ஒரு அப்பாவியாக இருக்கிறாள். அந்தப் பெண்ணை ஒரு ரவுடி பையனை வைத்து மிரட்டி காதல் செய்ய வைக்கிறாய். அதன் பின்னர் விபத்து ஒன்றில் அவனுக்கு ஏதோ ஒன்று ஆகிவிடுகிறது. அதில் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாகிறது, சரி. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு முறை பையன் இருக்கிறானே, அவனுடனாவது அவளை வாழ வைத்திருக்கலாம் என்று கூறினாராம்.
எப்படி கொடூரமாக யோசிக்கிறாய்:
அதுதான் சரியானதாகவும் இருக்கும். இப்போது கதாநாயகன் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டதோடு இல்லாமல், அந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் பாழாக்கி, அவள் முறை பையனின் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டான். அதோடு கடைசியில் அவனை பைத்தியக்காரனாகவே கொண்டு சேர்க்கிறாய். உன்னால் எப்படி இப்படி கொடூரமாக சிந்திக்க முடிகிறது. அந்தப் பெண்ணின் கதாபாத்திரம் என்பது நீ பெற்ற பெண் போன்றது.
எனக்காக அடையாளம் இருக்காது:
ஆனால், நீ பெத்த பிள்ளையை நீயே கழுத்தை நெரித்து கொல்வாயா. ஏன் இது போல் நடந்து கொள்கிறாய் என்று மிகவும் காட்டமாக பாலாவை திட்டினாராம். அதற்கு பாலா, உடனே நான் உங்கள் அளவுக்கு மென்மையானவன் இல்லை. எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்ததை தானே நான் செய்ய முடியும். உங்கள மாதிரியே நானும் படம் எடுத்தால், எனக்கான அடையாளம் எங்கே இருக்கும். மென்மையான படங்கள் எடுப்பதற்கு தான் நீங்கள் இருக்கிறீர்களே என்று கூறினாராம். அதற்கு பாலு மகேந்திரா பதில் சொல்லவே இல்லை என்றும் அந்தப் பேட்டியில் பாலா கூறியிருக்கிறார்.