பாரதி ராஜாவின் மருமகளை பார்த்துள்ளீர்களா - வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

By Rajkumar · 14/12/2021

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் பாரதிராஜா. இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதுமட்டும் இல்லாமல் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவருடைய மகன் தான் மனோஜ். இவரும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்.

1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு சமுத்திரம், கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும், மனோஜ் பல படங்கள் நடித்திருந்தாலும் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை.

பின்பு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் நடிப்பிலிருந்து விலகி பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது இவர் முழுநேரமும் இயக்குனராக அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர் தீவிரமாக படம் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன், மாநாடு ஆகிய இரு படங்களிலும் முக்கிய வேடத்தில் மனோஜ் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மனோஜ் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது வேற யாரும் இல்லைங்க, மனோஜ் மனைவி நந்தனா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.

behindtalkies AMP · Quick view
View full