100 படங்களை கடந்துவிட்டேன், ஆனால் - இயக்குனர் போஸ் வெங்கட் உருக்கமான பதிவு
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல், தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருந்தார்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதோடு இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் தான் நடித்து இருக்கிறார்.
போஸ் வெங்கட் பற்றிய தகவல் :
பின் இவர் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிமாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருந்தார். போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து போஸ் வெங்கட் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் சார். இது இவருடைய இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
போஸ் வெங்கட் இயக்கிய படங்கள்:
மேலும், இந்த படத்தில் விமல், சாயா தேவி, பருத்திவீரன் சரவணன், ரமா, சிராஜ் உட்பட பல சரவணன், நடித்திருந்தார்கள். கல்வியை மையமாக வைத்து வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகியிருந்த கங்குவா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
போஸ் வெங்கட் நடித்த படங்கள்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்குப்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி- விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்திலும் போஸ் வெங்கட் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இதை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
100 படங்களை கடந்துவிட்டேன்.. எனினும் நம்மை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.. “கங்குவா” விடுதலை 2 .. நல் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவா சார் மற்றும் வெற்றிமாறன் சார் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. @directorsiva Vetrimaran pic.twitter.com/9QI4LlEGtn
— Bose Venkat (@DirectorBose) December 25, 2024
போஸ் வெங்கட் பதிவு:
இப்படி இவர் பல ஆண்டு காலமாக சினிமாவில் பயணித்து வருகிறார். இருந்தாலும், இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் போஸ் வெங்கட் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், 100 படங்களை கடந்துவிட்டேன். எனினும் நம்மை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. “கங்குவா”, "விடுதலை 2 " போன்ற நல் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவா சார் மற்றும் வெற்றிமாறன் சார் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று கூறி இருக்கிறார்.