பட விழாவில் கலந்து கொள்ளாத விமல்- மேடையில் ஆதங்கத்துடன் பேசிய படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட்

By Rajkumar · 17/10/2024

சார் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் போஸ் வெங்கட் பேசியிருக்கும் விஷயங்கள்தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களின் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் சினிமா உலகில் நுழைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=KKpLzjFsUGU

அதன் பின் இவர் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பசங்க' திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இவர் நடிப்பிலிருந்து சில வருடங்கள் தள்ளி இருந்தார். தற்போது மீண்டும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.

சார் படம்:

அந்த வகையில் விமல் அவர்கள் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கியிருக்கும் 'சார்' படத்தில் நடித்திருக்கிறார். வெற்றிமாறன் தயாரிக்கும் இப்ப படத்தில் விமலுடன் இணைந்து சாயா கண்ணன், விஜய் முருகன், சரவணன், ஜெயபாலன், ரமா உள்ளிட்ட சிலர் நடிக்கிறார்கள். சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நாளை வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

விமல் கலந்து கொள்ளாதது ஏன்:

இந்நிலையில், சார் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் ஹீரோ விமல் கலந்து கொள்ளாதது ஏனென்று பலரையும் கேள்விக்கு உள்ளாக்கியது. பின் இது குறித்து பேசிய படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட், சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நாளை ( 17.10.24) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில்,மழை ஏதும் இன்று பெய்யாத காரணத்தால் திடீரென்று பத்திரிக்கையாளர் சந்திப்பை இன்றே (16.10.24) நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியது ‌.

போஸ் வெங்கட் கூறிய காரணம்:

அதனால், வெளியூரில் இருக்கும் விமலால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. மற்றபடி எனக்கும் விமலுக்கும் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் உறவினர்கள் எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர், சார் படத்தை 26 இடங்களில் கட் செய்து வெளியிட வேண்டும் என தணிக்கை குழு அறிவுறுத்தியது. இப்படத்தின் தயாரிப்பாளர் பல இடங்களில் கடன் வாங்கி படத்தை எடுக்க உதவி இருப்பதால், நான் தணிக்கை குழுவின் முடிவுக்கு முழு மனதாக கட்டுப்பட்டேன்.

https://www.youtube.com/shorts/ieqlleEvj9A

வெற்றிமாறனுக்கு நன்றி:

ஆனால், படம் வெளியான பின் youtubeல் நான் அனைத்து காட்சிகளையும் வெளியிடுவேன். சார் படத்தை ஓடிடியில் வாங்க நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை அனைத்தும் வெற்றிமாறனால் நிகழ்ந்த ஒன்று. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும். நான் திராவிட இயக்கத்தை சார்ந்தவனாக இருந்தாலும் இந்த படத்தில் எனது கருத்தியல் எதையும் திணிக்கவில்லை. கல்வி சார்ந்த படம் என்பதால், நான் கூற வந்த கருத்தை அனைவரும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்று பேசியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full