சித்து- ஸ்ரேயா சீரியலில் மீண்டும் நடந்து இருக்கும் மாற்றம் - முதல்ல அப்பா, இப்போ இவரா?
சித்து - ஸ்ரேயா நடிக்கும் வள்ளியின் வேலன் சீரியலில் இருந்து மீண்டும் முக்கிய பிரபலம் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்ந்தவர்கள் சித்து- ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘திருமணம்’ என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் தான் சித்து- ஸ்ரேயா மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்கள். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.
அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். மேலும், நடிகர் சித்து ‘திருமணம்’ சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்திருந்தார். அதே போல் நடிகை ஸ்ரேயாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்புடன் குஷி’ என்னும் சீரியலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ரஜினி' என்னும் சீரியலில் ஸ்ரேயா நடித்திருந்தார்.
சித்து- ஸ்ரேயா திரைப்பயணம்:
இவர்கள் நடித்த அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளியின் வேலன்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாக துணையாக நிற்கும் வேலனின் கதை தான் இந்த வள்ளியின் வேலன். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்து வந்தவர் சாக்ஷி சிவா.
வள்ளியின் வேலன்:
இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் இந்த சீரியலில் இருந்து சாக்ஷி சிவா வெளியேறி இருந்தார். இவருக்கு பதிலாக தற்போது ஆடிட்டர் ஸ்ரீதர் கமிட் ஆகிறார். இது பலருக்குமே ஷாக் தான். இவர் விலகியதற்கு காரணம், இவர் ஷூட்டிங்க்கு ஒத்துழைப்பு சரியாக தருவதில்லை. இவரால் நிறைய பிரச்சனை வருகிறது என்று ஒரு சிலர் கூறியிருந்தார்கள். இன்னொரு சிலர், இவருக்கும் சீரியல் யூனிட்டுக்கும் செட் ஆகவில்லை.
சீரியல் தொடங்கியதில் இருந்து இந்த பிரச்சனை இருக்கு என்று கூறியிருக்கிறார்கள். இதை அடுத்து சாக்ஷி சிவா சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
சீரியல் சர்ச்சை:
இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர், சேனல் மற்றும் சீரியல் யூனிட் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதை அடுத்து சேனல் மற்றும் சீரியல் யூனிட் தரப்பில் நடிகர் சங்கத்தில் முறையிட்டிருந்தார்கள். சிவாவுமே நடிகர் சங்கத்தில் தன் தரப்பு நியாயத்தை முன் வைத்திருந்தார். உடனே அவர்கள் சங்கத்திற்கு வருவதற்குள் சோசியல் மீடியாவில் விஷயத்தை பேசியது தவறு என்று கூறியதால் சிவா தான் பதிவிட்ட வீடியோவை டெலிட் செய்திருக்கிறார். இந்த விவகாரம் ஓய்ந்து முடிவதற்குள் தற்போது வள்ளியின் வேலன் தொடரில் மீண்டும் மாற்றம் செய்திருக்கும் தகவல் தான் வைரலாகி வருகிறது.
சீரியலில் மீண்டும் மாற்றம்:
அதாவது, முதலில் இந்த சீரியலை ராஜ்குமார் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது அவருக்கு பதில் பிரதாப் என்பவர் இயக்கியிருக்கிறார். இதற்கு முன் இவர் சந்தியா ராகம் என்ற தொடரை இயக்கியிருந்தார். இது குறித்து சீரியலுக்கு நெருக்கமானவர்கள் சொன்னது, ஒரு ஹீரோ -ஹீரோயினி ஜோடி சேர்ந்து நடித்து அவர்களுக்கிடையில் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகி அதன் மூலமாக அந்த சீரியல் ஹிட்டாவது பொதுவாக நடக்கும் விஷயம் தான். ஆனால், அதே ஜோடி திருமணத்துக்கு பிறகும் ஜோடியாக நடித்து அந்த சீரியல் முன்பு போலவே ஹிட் ஆகும் என்று எதிர்பார்ப்பது தமிழ் சீரியலைப் பொறுத்தவரை கொஞ்சம் கஷ்டமான விஷயம். அந்த வகையில் இந்த சீரியலிலும் நடந்திருக்கிறது. சீரியல் எதிர்பார்த்தபடி போகவில்லை என்றால் அதில் ஆர்டிஸ்ட்கள் மாற்றம் நடைபெறுவது வழக்கம் தான். இது ஒன்றும் ஆச்சரியமில்லை என்று கூறி இருந்தார்கள்.