3 பாகங்கள், பிறந்தநாளில் அறிவிப்பு, ராமதாஸின் வாழ்க்கை வரலாறு - இயக்குனர் சேரன் சொன்ன அப்டேட்
மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குனர் சேரன் எடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார். அதிலும் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது.
அதோடு சேரன் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருந்தது. பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் கடைசியாக இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அவர் நடித்தும் இருந்தார். இதனை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக சேரன் எந்த படத்தையும் இயக்கவில்லை நடித்து மட்டும் வந்தார்.
சேரன் திரைப்பயணம்:
மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் பயணம். இந்த வெப்சீரிஸை ஓடிடி தளத்தில் சேரன் வெளியிட்டு இருந்தார். அதன் பின் இவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப்பை வைத்து புதிய படத்தை இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதை அடுத்து சேரன் வெப் தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டு பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சேரன் அவர்கள் மலையாளத்தில் நடித்திருக்கும் வெளிவந்த நரிவேட்டை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
ராமதாஸின் வாழ்க்கை வரலாறு:
தற்போது சேரனின் ஆட்டோகிராப் படம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவர இருக்கிறது. இதை அடுத்து சேரன் அவர்கள் பாமக நிறுவனரும், கட்சியின் தலைவருமான மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக சேரன் போட்ட பதிவில், இன்று உங்கள் பேராதாரவுடன் ஒரு புதிய பயணம் தொடங்குகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்து அன்பும் தேவை. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும். ஒரு முக்கிய படம் மக்களுக்காக தயாராகிறது. விடியல் ஆரம்பம் என்று கூறியிருக்கிறார்.
சேரன் பதிவு:
மேலும், இது தொடர்பாக கோடம்பாக்கத்தில் வெளியான செய்தி, மருத்துவர் ராமதாஸின் பயோபிக்கை இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் விரும்பி இருக்கிறார். அவர்தான் சேரனிடம் இதைப் பற்றி பேசினார். சேரனும் மருத்துவரின் மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் கொண்டவர். இந்த சூழலில் தான் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை சில மாதத்திற்கு முன்பே சேரன் தொடங்கியிருந்தார். இந்த ஸ்கிரிப்ட் முடியும் நேரத்தில் தான் மலையாளத்தில் நரிவேட்டை படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது பயோபிக் ஆன ஸ்கிரிப்ட் வேலை முழுமையாக முடிந்து இருப்பதால் சேரன் அறிவித்திருக்கிறார். மருத்துவரின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ராமதாஸின் பிறந்த நாள் ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது.
கோடம்பாக்கத்தில் சொன்னது:
இந்த படம் மூன்று பாகங்களாக கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் பாகத்தில் ராமதாஸ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, மருத்துவம், ஏழை மக்களுக்கு சேவை செய்யும் விதம், சொந்தமாக கிளினிக் ஒன்றை தொடங்கி இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் எனக்கு குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்தது காணப்படும். ராமதாஸ் தன்னைச் சார்ந்த வன்னியர் சமூகத்தின் பின்தங்கிய நிலையை பற்றி சிந்தித்து தொடங்கியதுடன் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கட்சியை ஆரம்பித்தார். இரண்டாம் பாகத்தில் மற்ற சுவாரசியங்கள் எல்லாம் இருவருகிறது. அதோட ராமதாஸாக நடிக்கப்போவது யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது