கன்னத்தில் அரையப்பட்ட கங்கனா - சேரனின் ஆதரவு யாருக்கு தெரியுமா? அவரே போட்ட பதிவு

By Rajkumar · 8/6/2024

நடிகர் கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டைரக்டர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவுதான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கங்கனா முதலில் மாடல் அழகியாக இருந்து பின் திரைப்பட நடிகையானவர். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த 'கேங்ஸ்டர்' ஹிந்தி படம் மூலம் தான் இவர் சினிமா உலகில் தோன்றியிருந்தார். இவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

https://twitter.com/KanganaTeam/status/1798697545201569904

சமீபத்தில் பாலிவுட் நடிகையும், எம்பியுமான கங்கனாவை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த சிஐஎஸ்எப் பெண் பாதுகாவலர் குல்விந்நர் கவுர் கன்னத்தில் அடித்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஏகப்பட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் நடிகை கங்கனாவுக்கு ஆதரவாகவும், சிலர் அந்த பெண் பாதுகாவலருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைகளில் சிக்கிய கங்கனா:

சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்துக்களை பகிர்ந்ததற்காக கங்கனா ட்விட்டரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது கருத்துக்களை கங்கனா வெளியிட்டு வந்தார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த கங்கனாவுக்கு பாலிவுட்டில் மறைமுகமாக ரெட் கார்ட் விதிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். அவர் நடித்து வந்த படங்களும் பெரிய அளவில் ஓடாமல் தோல்வியை தழுவின.

https://twitter.com/iAnkurSingh/status/1798703050540118203

கங்கனாவை தாக்கியதற்கு காரணம்:

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, 'தரக்குறைவாக காசுக்காக போராடும் தீவிரவாதிகள்' என கங்கனா பேசியதால்தான் அவரை தாக்கினேன். மேலும் அந்தப் போராட்டத்தில் எனது அம்மாவும் கலந்து கொண்டார் என குல்விந்தர் கவுர் விளக்கம் அளித்துள்ளார். எனினும் பணி நேரத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளின் பெயரில் ஒரு பிரபலத்தை தாக்குவது தண்டனைக்குரிய செயல் என துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சேரனின் ட்விட்:

இந்நிலையில்தான் இயக்குனர் சேரன், இந்தப் பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன். அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால், மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார், ஹாட்ஸ் ஆப்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எம்.பி கங்கனா:

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கங்கனா வெற்றி பெற்றுள்ளார். இன்னும் சில நாட்களில் எம்.பி ஆக பதவி ஏற்க உள்ள நிலையில், இயக்குனர் சேரனின் பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full